This Article is From Nov 15, 2018

கஜா புயல்: திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் மழை!

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலின் வெளிப்பகுதி கரையை தொட்ட நிலையில் திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

கஜா புயல்: திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் மழை!

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாகையிலிருந்து 125 கி.மீ தூரத்தில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. 10.கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் பள்ளிக்கரணை, பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

.