This Article is From Jan 14, 2020

புளோரிடா கடலில் கிடைத்த வயதான மீன்...!

ஓட்டோலித்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பகுதி மீனின் வயதை மதிப்பிட விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

புளோரிடா கடலில் கிடைத்த வயதான மீன்...!

மீனை தென்மேற்கு சியஸ்டா கீவைச் சேர்ந்த மீனவர் ஜேசன் பாயல் பிடித்துள்ளார். (AFP)

புளோரிடா மகாண கடலில் 50 ஆண்டு பழமையான மீன் பிடிபட்டுள்ளது.  புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஆராய்ச்சி நிறுவனம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் “மிகப் பழமையான மாதிரிகளின் சேகரிப்பிற்கு  ஒரு மீன் கிடைத்துள்ளது” என்று புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆய்வக உயிரியல் ஆய்வாளர்கள் மீனின் வயதைக் கணக்கிட்டு மூளைக்கு பின்னால் அமைந்துள்ள கடினமான கால்சியம் கட்டமைப்புகளை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. 

ஓட்டோலித்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பகுதி மீனின் வயதை மதிப்பிட விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. 

350 பவுண்டுகள் (160 கிலோகிராம்) எடையுள்ள மீனை தென்மேற்கு சியஸ்டா கீவைச் சேர்ந்த மீனவர் ஜேசன் பாயல் பிடித்துள்ளார்.

புகைப்படத்தில் பாய்ல் தான் பிடித்த மீனுக்கு அருகில் நிற்கிறார். மீன் அவரை விட பெரிதாக உயரமாக உள்ளது. 

Click for more trending news


.