This Article is From Aug 08, 2020

விபத்துக்கு முன்னர் இரு முறை தரையிறங்க முயன்ற ஏர் இந்தியா விமானம்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Kozhikode: கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. 

விபத்துக்கு முன்னர் இரு முறை தரையிறங்க முயன்ற ஏர் இந்தியா விமானம்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட டிவி சேனல்களின் காணொலிக் காட்சிகளைப் பார்க்கும்போது, விமானம் இரண்டாக பிளந்துள்ளது தெரிகிறது. 

New Delhi:

துபாயிலிருந்து கேரளாவுக்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ரன்வே பகுதியிலிருந்து வழக்கிச் சென்று விபத்துக்கு உள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்கியுள்ளது. 

இந்நிலையில் விமானங்கள் தொடர்பான FlightRadar24 என்னும் இணையதளம், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் பல முறை வட்டமடித்துள்ளது. இரு முறை தரையிறங்க முயன்றுள்ளது' என்கிற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது. 

கோழிக்கோடு விமான நிலையம், ‘டேபிள் டாப்' விமான நிலையம் என்று சொல்லப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், டேபிள் டாப் விமான நிலையத்தின் ரன்வே, மலை மீதோ, உயரமான பகுதி மீதோ இருக்கும். ரன்வே தாண்டி சென்றால் பள்ளம் இருக்கும். இதைப் போன்ற விமான நிலையங்களில் விமானங்களைத் தரையிறக்குவது சவாலான காரியமாகும்.

IX 1344 என்ற எண் கொண்ட அந்த விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது. விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 50 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியை ஏர் இந்தியா நிறுவனம், ‘வந்தே பாரத்' என்னும் பெயரில் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. 

விபத்து நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட டிவி சேனல்களின் காணொலிக் காட்சிகளைப் பார்க்கும்போது, விமானம் இரண்டாக பிளந்துள்ளது தெரிகிறது. 

கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு, இந்தியாவில் மிகப் பெரும் விமான விபத்து நடந்தது. துபாயிலிருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 - 800 விமானம், ரன்வே பகுதியையும் தாண்டிச் சென்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 158 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். 

.