தடுப்புகளையும் மீறி சண்டையிட்ட இரு புலிகள்... சிலிர்க்க வைக்கும் வீடியோ!

வேலியின் ஒருபுறத்தில் ஒரு புலியும், மறுபுறத்தில் மற்றொரு புலியும் நின்று சண்டையிடுகிறது.

தடுப்புகளையும் மீறி சண்டையிட்ட இரு புலிகள்... சிலிர்க்க வைக்கும் வீடியோ!

புலிகள் சண்டையிடும் வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்தா பதிவிட்டுள்ளார்

கர்நாடகாவில் பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா ஒன்றில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து, வைரலாகியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் எக்கச்சக்க உயிரினங்கள் உள்ளன. இந்த பூங்காவில் கடந்தாண்டு ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு புலிகள் தென்பட்டன. 

அவை ஒன்றையோன்று ஆக்ரோஷமாக பாயந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தது. வேலியின் ஒருபுறத்தில் ஒரு புலியும், மறுபுறத்தில் மற்றொரு புலியும் நின்று கொண்டிருந்தது. இரண்டும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது. 
 

இந்த புலிகள் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை அப்படியே படம் பிடித்த வனத்துறையினர், சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். கடந்தாண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும், வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். இதனையடுத்து  இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

வனத்துறை அதிகாரி சுஷாந்தா இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.


பொதுவாக புலிகள் தங்களது பலத்தை நிரூபிப்பதற்காகவும், பெண் புலியோடு சேருவதற்காகவும் சண்டையிடும். பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் புலிகள் இவ்வாறு சண்டையிடுவது முதன்முறை அல்ல. ஏற்கனவே, இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 

Click for more trending news