பாம்பு என்றும் பாராமல் அசால்டா ஹாண்டில் பண்ண "சூப்பர் பாட்டி"!

இந்த வீடியோ ரெடிட் தளத்தில்தான் முதலில் வந்துள்ளது. அங்கிருந்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது பரவி வைரலாகி வருகிறது.

பாம்பு என்றும் பாராமல் அசால்டா ஹாண்டில் பண்ண

அதிகாரி நந்தா, வீடியோவைக் காலையில் பகிர்ந்ததிலிருந்து பல்லாயிரம் பார்வைகளை குவித்து வருகிறது.

ஆன்லைனில் பகிரப்படும் சில வீடியோக்களைப் பார்த்த பின்னரும், நாம் பார்த்ததை நம்பவே முடியாது. காரணம், அந்த வீடியோவில் வரும் காட்சிகள் ரியாலிட்டிக்கு முற்றிலும் புறம்பான விஷயமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் பல சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் ஒரு வயதான பாட்டி, நல்லப் பாம்பை, கயிறைப் பிடித்திருப்பது போல பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார். வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவரால் ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவுடன் அவர், “பாட்டி, ஒரு நல்லப் பாம்பை இப்படி கையாளக் கூடாது!” என்று கருத்திட்டுள்ளார். 

வீடியோவில் மூதாட்டி ஒருவர், ஆளுயுர நல்லப் பாம்பை தன் ஒரு கையில் எந்த விதச் சலனமுமின்றி பிடித்துள்ளார். பாம்பும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறது. அப்படியே வீடுகளைத் தாண்டி பாம்பை இழுத்துச் செல்லும் பாட்டி, ஒரு கட்டத்தில் அதை சுழற்றித் தூக்கி எறிகிறார். இப்படி படை நடங்கும் பாம்பை அசால்டாக ஹாண்டில் செய்த ‘சூப்பர் பாட்டிக்குப்' பலரும் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

வீடியோவைப் பார்க்க:

அதிகாரி நந்தா, வீடியோவைக் காலையில் பகிர்ந்ததிலிருந்து பல்லாயிரம் பார்வைகளை குவித்து வருகிறது. சிலரின் கருத்துகள் இதோ:

இந்த வீடியோ ரெடிட் தளத்தில்தான் முதலில் வந்துள்ளது. அங்கிருந்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது பரவி வைரலாகி வருகிறது. 

Click for more trending news