காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம் : அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்

கரப்பான் பூச்சி அவர் மீந்து போய் வைத்த உணவை சாப்பிட்டு அவரின் காதுக்குள்ளே குடியிருந்துள்ளது. கரப்பான் பூச்சி எத்தனை நாட்களாக உள்ளே இருந்தது என்று கண்டறியமுடியவில்லை.

காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம் : அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்

கிட்டத்தட்ட 10 குட்டி குட்டி கரப்பான்கள் இருந்ததை கண் அதிர்ச்சி உறைந்து போயுள்ளார். (Representative Image)

சீனாவில் ஒரு நபரின் காதுக்குள் கரப்பான் பூச்சியின் குடும்பமே வாழ்ந்து வந்துள்ளது. சீனாவில் வாழும் எல்.வி என்ற நபர் கடும் காது வலியினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் காதுக்குள் டார்ச் அடித்து பார்த்தபோது உயிருடன் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதை நீக்கியபின் கிட்டத்தட்ட 10 குட்டி குட்டி கரப்பான்கள் இருந்ததை கண் அதிர்ச்சி உறைந்து போயுள்ளார். 

எல்.விக்கு எப்போதும் காதுக்குள் ஏதோ ஒன்று ஊருவது போன்ற உணர்வு இருந்துள்ளது. ஆனால், அப்போது சரியான சிகிச்சை எடுக்காமல் இருந்துள்ளார். வலி என்று வந்ததும் தான் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இரவு உணவை சாப்பிட்டு விட்டு அதை படுக்கைக்கு பக்கத்திலே வைத்து விட்டு படுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

கரப்பான் பூச்சி அவர் மீந்து போய் வைத்த உணவை சாப்பிட்டு அவரின் காதுக்குள்ளே குடியிருந்துள்ளது. கரப்பான் பூச்சி எத்தனை நாட்களாக உள்ளே இருந்தது என்று கண்டறியமுடியவில்லை.

 மருத்துவர் எல்.வியின் காதில் இருந்த பூச்சிகளை அகற்றி காயத்திற்கு மருந்து ஒன்றினையும் வழங்கியுள்ளார். 

Click for more trending news

More News