This Article is From Sep 03, 2018

பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம் - நீத்தி ஆயோக் தலைவர்

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான கொள்கை முடிவுகள் தான் பொருளாதார வளர்ச்சியில் சுனக்கம் ஏற்பட காரணம் என அவர் சுட்டிக் காட்டுகிறார்

பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம் - நீத்தி ஆயோக் தலைவர்
New Delhi:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை என்கிறார் நீத்தி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார். அதே நேரம், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான கொள்கை முடிவுகள் தான் பொருளாதார வளர்ச்சியில் சுனக்கம் ஏற்பட காரணம் என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ரகுராமன் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த காலகட்டத்தில் வாரக் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது என்கிறார் ராஜிவ். பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது இந்திய பொருளாதாரத்தில் பெரிய அடியைக் கொடுத்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. “ இது தவறான கண்ணோட்டம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து பேசுகின்றனர்” என்று ராஜிவ் மறுப்பு தெரிவிக்கிறார்.

0rr12p18

“வளர்ச்சி விகித புள்ளி விவரங்களை பார்த்தால், பண மதிப்பிழப்பால் வளர்ச்சி சரியவில்லை என்று புரியும். கடந்த 6 காலாண்டுகளாக வளர்ச்சி சரிந்து வருகிறது. அதன் தொடர்ச்சியே இந்த சரிவு” என்கிறார் அவர்.

“2015-2016-ம் ஆண்டு தொடங்கி, 9.2% ஆக இருந்த வளர்ச்சி 6 காலாண்டுகளாக சரிந்து வந்ததற்கு பண மதிப்பிழப்பு காரணம் அல்ல. வங்கிகளில் அதிகரித்த வாராக் கடன்களே காரணம். மோடி அரசு பொறுப்பேற்கும் போது 4 லட்சம் கோடியாக இருந்தது வாராக் கடன். இது 2017-ம் ஆண்டு 10.5 லட்சம் கோடியாக இருந்தது. ரகுராம் ராஜன் காலத்தில், வாராக் கடன்களை கண்டறிய சில முறைகள் பயன்படுத்தப்பட்டன. அது, தான் வாராக் கடன் அதிகரிப்புக்கு காரணமாகிவிட்டது. அதன் பிறகே அரசு தொழில் கடன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்தியது. அதனால், சிறு மற்றும் குறு தொழில் துறைக்கு கடன் உதவி குறைந்தது.” என்கிறார்.

“வளர்ச்சியை சீராக்க, அரசு பொது முதலீட்டு செலவுகளை அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே 2017-2018 ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி கிடைத்துள்ளது” என்றும் ராஜிவ் குமார் தெரிவிக்கிறார்.

.