This Article is From May 12, 2020

ஆட்டை திருடியதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை! கிராம மக்கள் வெறிச்செயல்

படுகாயம் அடைந்திருந்த 2 பேரையும் மீட்ட போலீசார், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் சுபான் அன்சாரி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆட்டை திருடியதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை! கிராம மக்கள் வெறிச்செயல்

ஆட்டைத் திருடியதற்காக மனிதரை அடித்துச் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • The man and his friend were accused of stealing a goat by villagers
  • Villagers claim they were spotted cutting up the goat outside the village
  • The incident has emerged in the middle of nationwide coronavirus lockdown
Dumka, Jharkhand:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டைத் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2 இளைஞர்கள் கிராம மக்களால் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தும்கா மாவட்டத்தில் உள்ள கத்திக்குண்டு என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்திற்கு வெளிப்புறத்தில், ஆடுகளை சிலர் அறுத்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த கிராம மக்கள், அவர்கள் ஆட்டைத் திருடி கசாப்பு போடுகிறார்கள் என நினைத்து அவர்களை விரட்டினர்.

கிராம மக்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டதால் அவர்களின் பிடியில் இருந்து சுபான் அன்சாரி, துலால் மிர்தா என்ற 2 இளைஞர்கள் தப்பிக்க முடியவில்லை. 

இருவரையும் அடித்து இழுத்து வந்த கிராம மக்கள், ஊரில் உள்ள மரத்தில் கட்டி வைத்து தாறுமாறாக அடிக்கத் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள். 

படுகாயம் அடைந்திருந்த 2 பேரையும் மீட்ட போலீசார், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் சுபான் அன்சாரி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தசம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்பர் லக்டா கூறுகையில், 'ஆட்டை திருடியதாக கூறி 2 பேரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒருவர் உயிரிழந்து விட்டார். இன்னொருவருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் கிராம மக்கள் மற்றும் அந்த 2 இளைஞர்களுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும்' என்றார். 

ஆட்டைத் திருடியதற்காக மனிதரை அடித்துச் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

.