This Article is From Jan 18, 2020

மீன்களுக்கு உணவூட்டும் வாத்து! - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!!

இதுவரை 12 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

மீன்களுக்கு உணவூட்டும் வாத்து! - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!!

அந்த வைரல் வீடியோவில் வாத்து ஒன்று மீன்களுக்கு தானியம் ஊட்டுகிறது.

புகழ்பெற்ற முகநூல் பக்கம் ஒன்றில், வாத்து ஒன்று தனது சாப்பாட்டை மீன்களுக்கும் பகிர்ந்து உணவூட்டுகிறது. சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ காண்போர் அனைவரையும் ஆச்சர்யத்திலும் ஆழத்தியுள்ளது. 

தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், வாத்து ஒன்று தண்ணீருக்கு மேல் தானியங்கள் நிரப்பப்பட்ட தட்டின் மீது நிற்கிறது. இரக்க குணம் கொண்ட அந்த வாத்து, தனக்கு வைக்கப்பட்ட அந்த தானியங்களை எடுத்து கீழே தண்ணீரில் இருக்கும் மீன்களுக்கு உணவு அளிக்கிறது. 

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் சரியாக தெரியவில்லை. எனினும், புகழ்பெற்ற பிரேசிலியன் மீனவர்கள் பக்கமான தியாஸ் இ நோய்டீஸ் டி பெஸ்க என்ற பக்கத்தில் இந்த வீடியோ கடந்த சனிக்கிழமையன்று பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை 12 மில்லியனுக்கு அதிகாமானோர் இதுவரை பார்த்துள்ளனர். 

வைரல் வீடியோவை காணுங்கள்;


மேலும், 12 மில்லியன் பார்வையாளர்களுடன், 2.8 லட்சம் பேர் ஷேர்களையும், ஆயிரக்கணக்கான கமெண்டுகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. இந்த வீடியோ ட்வீட்டர் உள்ளிட்ட மற்ற சமூகவலைதள பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மீன்களுக்கு உணவு அளிக்கும் வாத்தின் வீடியோ முதல்முறையாக இப்போது தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ல் இதுபோன்ற வீடியோ ஒன்று வைரலானது. அப்போது, கரோலினா வாட்டர்ஃபோல் மீட்பு நிர்வாக இயக்குனர் கூறும்போது, வாத்துகள் மீன்களுக்கு உணவூட்டுகிறது என்று நாம் நினைப்பது நல்லதே. 

எனினும், உன்மை என்னவென்றால், வாத்துகள் தங்கள் உணவுகளை தண்ணீரில் நினைப்பது வழக்கம். இந்த சமயத்தில் மீன்கள் வாத்துகளின் உணவுகளை திருடுவதாக அவர் தெரிவித்திருந்தார். 
 

.