This Article is From Feb 04, 2019

கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள அரைபி... பஹ்ரைனுக்கு அனுப்பாதீர்கள் என கோரிக்கை

2014ல் அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன் பஹ்ரைனில் இருந்துள்ளார். நவம்பர் மாதம் பாங்காக்கிற்கு தேனிலவு சென்ற போது பஹ்ரைன் உத்தரவின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டார்.

கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள அரைபி... பஹ்ரைனுக்கு அனுப்பாதீர்கள் என கோரிக்கை

பஹ்ரைன் கால்பந்து வீரர் ஹக்கிம் அல் அரைபி தாய்லாந்து நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்.

Bangkok:

பஹ்ரைன் கால்பந்து வீரர் ஹக்கிம் அல் அரைபி தாய்லாந்து நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். அப்போது அவரது கால்கள் நகராதவாறு கட்டப்பட்டிருந்தன. பஹ்ரைனுக்கு செல்ல மாட்டேன் என்று அவர் சிறையில் இருந்து முறையிட்டிருந்தார்.

நிருபர்கள், போராட்டக்காரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய தூதர் ஆலன் மெக்கின்னன் உள்ளிட்ட அனைவரும் அரைபியை வரவேற்க காத்திருந்தனர்.

அரைபி தன்னை பஹ்ரைனுக்கு அனுப்ப வேண்டாம், அங்கு சித்திரவதை செய்வார்கள் என்று முறையிட்டிருந்தார்.

2014ல் அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன் பஹ்ரைனில் இருந்துள்ளார். நவம்பர் மாதம் பாங்காக்கிற்கு தேனிலவு சென்ற போது பஹ்ரைன் உத்தரவின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து கேப்டன் க்ரெய்க் போஸ்டர் அரைபியின் விடுதலைக்காக குரல் கொடுத்தார்.

மேலும் போஸ்டர், அரைபியின் மனைவியிடம் ஆஸ்திரேலியா உங்களோடு இருப்பதாக கூறியுள்ளார். "நாங்கள் இருக்கிறோம் கவலை கொள்ள வேண்டாம் ஹக்கிம்" என்று கூறியுள்ளார்.

போலீஸ் நிலையத்தை தாக்கிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் அரைபி.

ஆனால் அதனை அரைபி மறுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் கால்பந்து ஆடிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அரைபி தரப்பு வழக்கறிஞர்கள் "எங்களிடம் ஆதாரம் உள்ளது. அவர் பஹ்ரைன் செல்ல மாட்டார்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அரைபியை வேறு சிறைக்கு மாற்ற சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.