This Article is From Sep 27, 2018

மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறு அறுவை சிகிச்சைக்கு பின் இன்று மாலை வீடு திரும்பினார்

மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Chennai:

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறு அறுவை சிகிச்சைக்கு பின் இன்று மாலை வீடு திரும்பினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவுக் காரணமாக நேற்றிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலது காலில் சிறிய கட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவரது வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்க வேண்டியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அவர் மாலையில் வீடு திரும்புவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மு.க.ஸ்டாலினுக்கு வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அப்போலோ மருத்துவமனையிலிருந்து மாலையில் வீடு திரும்பினார்.

.