This Article is From Mar 13, 2020

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவக்குமார் நியமனம்! சோனியா அறிவிப்பு

சிவக்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் திகார் சிறையில் சிலகாலம் இருந்தார். பணமோசடி வழக்கில் ரூ. 25 லட்சம் ஜாமீன் வழங்கி சிவக்குமார் ரிலீஸ் ஆகியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவக்குமார் நியமனம்! சோனியா அறிவிப்பு

சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையா

ஹைலைட்ஸ்

  • கர்நாடகாவில் காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமித்துள்ளார் சோனியா
  • கடந்த டிசம்பர் மாதம் முதற்கொண்டு கர்நாடக காங். தலைவர் பதவி காலியாக உள்ளது
  • கட்சியை வலிமைப்படுத்துவார் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா வாழ்த்து
Bengaluru:

கர்நாடக காங்கிரஸ் தலைவராகக் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 'எல்லோரும் ஒரே குழுவாகச் செயல்படுவோம். நான் மட்டுமே தனியாக முடிவுகளை எடுக்க மாட்டேன். நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்' என்று தெரிவித்தார். 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டுவெளியேறியுள்ள நிலையில், டிகே சிவக்குமாருக்கு புதிய பொறுப்பு வாங்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி நீடிப்பதற்கு சிவக்குமார் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் பலன் அளிக்கவில்லை.

தற்போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் திகார் சிறையில் சிலகாலம் இருந்தார். பணமோசடி வழக்கில் ரூ. 25 லட்சம் ஜாமீன் வழங்கி சிவக்குமார் ரிலீஸ் ஆகியுள்ளார்.

.

சிவக்குமாருக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'டிகே சிவக்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய தலைவரை நியமித்ததற்காகச் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் காங்கிரசை சிவக்குமார் வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று ஈஷ்வர் காண்ட்ரே, சதிஷ் ஜர்கிஹோலி மற்றும் சலீம் அகமது ஆகியோர் கர்நாடக காங்கிரசின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக காங்கிரஸ் கட்சி டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதற்குப் பொறுப்பேற்று அப்போதைய மாநில தலைவர் ராவ், தனது பதவியை ராஜினாமா செய்தார். 

With input from ANI

.