This Article is From Aug 03, 2020

அயோத்தி பூமி பூஜை விழாவை தள்ளி வைக்க வேண்டும்: திக்விஜய சிங் வலியுறுத்தல்

இந்த பூமி பூஜையை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்க அனுப்பி வைக்க உள்ளதாக இருக்கிறீர்கள் மோடி ஜி?

அயோத்தி பூமி பூஜை விழாவை தள்ளி வைக்க வேண்டும்: திக்விஜய சிங் வலியுறுத்தல்

இந்த பூமி பூஜையை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்க அனுப்பி வைக்க உள்ளதாக இருக்கிறீர்கள் மோடி ஜி?

New Delhi:

அயோத்தி பூமி பூஜை விழாவை தள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், வரும் புதன்கிழமை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்த விழாவின் முக்கியம்சமாக, 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கலை வைத்து பிரதமர் மோடி அடிக்கால் நாட்ட உள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் இந்த பூமி பூஜை விழாவை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக திக்விஜய சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை தொடக்க விழாவை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது நல்ல நேரம் அல்ல என்பதையும் பலரும் தெரிவிக்கின்றனர். அயோத்தி கோயில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இந்த பூமி பூஜையை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்க அனுப்பி வைக்க உள்ளதாக இருக்கிறீர்கள் மோடி ஜி? யோகிஜி இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேசுங்கள். சனாதனா தர்மத்தை எப்படி நீங்கள் மீறலாம்? அப்படி என்ன நிர்பந்தம் உங்களுக்கு? 

அயோத்தி அடிக்கல் நாட்டு விழா ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த கோவில் குருக்களுக்கு, உத்தர பிரதேச அமைச்சர், உத்தர பிரதேச பாஜக தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அப்படி இருக்கும்போது, பிரதமர் மோடியும், உத்தர பிரதேச முதல்வரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாமா? 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது சராசரி மனிதருக்கு மட்டும் தானா? பிரதமருக்கு பொருந்தாதா? 

ஆக.5ம் தேதி பிரதமர் மோடிக்கு பொருத்தமான நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்துள்ளனர். அந்த நாள் பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நாள் இல்லை என மடாதிபதிகளும் தெரிவித்து விட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகால இந்து நம்பிக்கைகளை விட மோடியின் வசதி பெரியதா? 

கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை மையமாக ராமர் இருக்கிறார். அதனால், கடைபிடித்து வரும் மரபுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

.