This Article is From May 19, 2019

தேர்தல் வெற்றிக்காக கேதார்நாத்தில் வழிபாடா? பிரதமர் மோடி பதில்..!

உத்தரகாண்டிற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு கேதார்நாத்தில் வழிபட்ட பின்னர் காவி உடையணிந்து குகைக்குள் தியானம் மேற்கொண்டது போல் புகைப்படங்கள் வெளியானது.

குகைக்குள் தியானத்தை முடித்த பிரதமர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஹைலைட்ஸ்

  • குகைக்குள் தியானத்தை முடித்த பிரதமர் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் வழிபட 2 நாட்கள் மோடி பயணம்.
  • நான் தனிமையில் கொஞ்ச நேரம் செலவழிக்க நேரிட்டது.
Kedarnath:

இரண்டு நாட்களுக்கு தனியாக நேரத்தை செலவிட அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இது தனது பணிகளில் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று காலை கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார்.

hbhbp5pg

பின்னர் கேதார்நாத் குகைக்கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். அங்கு காவி உடையணிந்து பிரதமர் மோடி புனித குகைக்கோவிலில் தியானம் செய்வது போல், புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியானது. தொடர்ந்து அவர் இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.

இதனிடையே, கேதார்நாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கேதார்நாத்தில் வழிபட்டதை தான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதர்நாத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தோம் என்றார்.

0b931se8

மேலும், இந்த வேண்டுதலின் போது எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேர்தல் வெற்றியை கூட கேட்கவில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மோடி, நான் கடவுளிடம் எனக்காக எதுவுமே கேட்கவில்லை. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்காவும் தான் பிரர்த்தனை செய்தேன் என்றார். பத்ரினாத் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலையே மோடி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

5renbb3g

இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். தொடர்ந்து 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

.