கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

டெல்லியில் நேற்று நள்ளிரவில் பயணி ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர், கத்தியால் குத்தப்பட்டார்.


New Delhi: 

ஆட்டோவில் பயணியிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் மையப்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியின் வழியே சென்றவர்கள் ஓட்டுநர் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரித்த போது ஓட்டுநர் ஜகாங்கீர் ஆலம் (26) என்று அறியப்பட்டார். அவர் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட ஓட்டுநரை ராம் மோகன் லோஷியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் ஜகாங்கீர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நபர் கூறுகையில், கத்தியால் குத்தப்பட்ட ஒருவர் தங்களை நோக்கி ஓடிவந்ததாகவும், இரத்தம் வழிந்து கொண்டிருந்ததால் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. இருப்பினும் பயணி ஒருவர் கத்தியால் குத்தியதாக மட்டும் கூறியதாக தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் தாக்ஷின் பூரியில் வசிக்கும் இருவரை கைது செய்துள்ளதாக துணை ஆணையர் மதூர் வர்மா தெரிவித்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கான்பூரிலிருந்து தெற்கு டெல்லிக்கு செல்ல வேண்டுமென்று 4 பேர் ஆட்டோவில் ஏறியதாகவும், செல்லும் வழியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இரவு நேர சவாரி எனக்கூறி ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணம் கேட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பயணி ஓட்டுநரை கத்தியால் குத்தியுள்ளார் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................