This Article is From May 21, 2020

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் கடும் சேதம்; 12 பேர் உயிரிழப்பு! - முக்கிய தகவல்கள்

Cyclone Amphan: ஆம்பன் புயலின் தாக்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மோசமானது என்றும், மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Cyclone Amphan: மேற்கு வங்கத்தில் 5 லட்சம் பேர் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Kolkata:

பல ஆண்டுகளாக வங்கக்கடலில் இல்லாத வகையில் ஏற்பட்ட மிக மோசமான புயல்களில் ஒன்றான ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சக்திவாய்ந்த ஆம்பன் புயல் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் கடும் சிரமமடைந்துள்ளனர். ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியதில் மேற்குவங்கம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. ஆம்பன் புயலின் தாக்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மோசமானது என்றும், மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

குறைந்தது இரண்டு மாவட்டங்கள் - வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் - பல ஆண்டுகளில் இப்பகுதியில் தாக்கிய பலமான புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை விட மிக அதிகமான பாதிப்பை ஆம்புன் புயல் ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு பகுதியாக இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டது. இதனால் தகவல் தொடர்புகளும் பாதிக்கப்பட்டன. 5 லட்சம் பேர் வரை வெளியேற்றப்பட்ட போதிலும், புயலின் மூர்க்கத்தன்மையை மாநில அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து, மழையும் பெய்து வந்ததால், அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளை உடனடியாக அணுகவும் முடியவில்லை என மம்தா தெரிவித்திருந்தார்.

நான் தற்போது கட்டுப்பாட்டு அறையிலே இருக்கிறேன். நபன்னாவில் உள்ள எனது அலுவலகமும் சேதமடைந்துள்ளது. போரில் ஒரு கடினமான சூழ்நிலையை சமாளித்து வருகிறேன். புயல் நள்ளிரவு வரை தொடர வாய்ப்புள்ளது என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் மம்தா கூறியிருந்தார். 

மூடப்பட்டிருக்கும் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. அதனால், அங்குள்ள பல கட்டமைப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. 

மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பலத்த காற்று வீசியதில், கார்கள் தூக்கி வீசப்பட்டன. மரங்களும், மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதனால், நகரில் பல பகுதிகள் இருளில் மூழ்கின. சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டன, மரங்கள் வேருடன் சரிந்து விழுந்து கிடந்தன. இதனால், கொல்கத்தா உள்ளிட்ட பல மாவட்டங்கள் நேற்றிரவு மின் தடையில் இருந்தன. எனினும், ஒரு சில பகுதிகளில் இரவில் தாமதமாக மின்சாரம் சரிசெய்யப்பட்டது. 

இன்று அதிகாலை 5:30 மணி நிலவரப்படி கொல்கத்தாவிலிருந்து வடகிழக்கில் சுமார் 270 கி.மீ தூரத்தில் ஆம்பன் புயல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து அந்த திசையில் நகர்ந்து அடுத்த மூன்று மணிநேரங்களில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த பகுதிக்கு செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் நிலையில், புயலும் சேர்ந்துள்ளதால் நாட்டிற்கு இருமடங்கு சவாலாக உள்ளது என தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்கு பின்னர் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான இரண்டாவது "சூப்பர் புயல்" இதுவாகும். 
 

.