புயல் பாதித்த ஒடிசா, மேற்வங்க மாநிலங்களுக்கு துணை நிற்போம்: கெஜ்ரிவால்

New Delhi:

ஆம்புன் புயல் பாதித்த மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் துணை நிற்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

அதி தீவிர சூப்பர் புயலான ஆம்பன் புயலால், மேற்குவங்கத்தில் 77 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல், ஒடிசா மாநிலத்திலும் கடலோர மாவட்டங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் துணை நிற்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஆம்பன் புயலால் கடும் இழப்பை சந்தித்துள்ள மேற்குவங்க மக்களுக்கும், தங்களுக்கும் டெல்லி மக்கள் சார்பாக முழு ஆதரவு அளித்து துணை நிற்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

நெருக்கடியான இந்த நேரத்தில் நாங்கள் எந்த வகையில் உதவ வேண்டும் என்பதை தெரியபடுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இதேபோல், மற்றொரு ட்விட்டர் பதிவில் ஒடிசா மாநிலத்துடன் துறை நிற்பதாகவும், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாவகும் முதல்வர் நவீன் பட்நாயக்கு தெரிவித்துள்ளார்.