இறுதியில் வேறு வழியின்றி முககவசம் அணிந்தார் டிரம்ப்!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளாக கண்டறியப்பட்டனர். இதுவரை நாடு முழுவதும் 1.34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இறுதியில் வேறு வழியின்றி முககவசம் அணிந்தார் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப், "முகமூடி அணிவது ஒரு பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

Washington:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஏறத்தாழ 32.5 லட்சம் கொரோனா நோயாளிகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இதுவரை முககவசம் அணியாமல் இருந்த அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது பொதுவெளியில் முககவசத்தினை அணிந்துள்ளார்.

வாஷிங்டனுக்கு வெளியே உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் காயமடைந்த ராணுவ வீரர்களை சந்திக்க சென்றிருந்த டிரம்ப் கறுப்பு நிற முககவசத்தினை அணிந்திருந்தார். முன்னெப்போதும் முககவசத்தினை பயன்படுத்தாத அதிபர் தற்போது முககவசத்தினை அணிந்திருந்தது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, “நான் எப்போதும் முககவசங்களை தவிர்க்க விரும்பியதில்லை. ஆனால், அதனை பயன்படுத்துவதற்கான நேரமும், இடமும் இருப்பதாக நான் நம்புகிறேன்.” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருப்பதாலும் டிரம்ப் இவ்வாறாக நடந்துக்கொள்கிறார் என விமர்சனங்கள் பெரும்பாலும் முன்வைக்கப்படுகின்றன.

“மருத்துவமனையில் இருக்கும் போதும், சிகிச்சைப் பெறுபவர்கள் மற்றும் மக்களுடன் பேசும்போதும் முககவசம் அணிய வேண்டும் என நான் கருதினேன். முககவசம் அணிவது பெரிய விசயம் என நான் நினைக்கின்றேன்” என டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளாக கண்டறியப்பட்டனர். இதுவரை நாடு முழுவதும் 1.34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.