This Article is From May 13, 2020

'கடந்த 20 ஆண்டுகளில் உலகை அச்சுறுத்திய 5 வைரஸ்கள் சீனாவில் இருந்துதான் பரவியது' : அமெரிக்கா

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 40 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.50 லட்சம்பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

'கடந்த 20 ஆண்டுகளில் உலகை அச்சுறுத்திய 5 வைரஸ்கள் சீனாவில் இருந்துதான் பரவியது' : அமெரிக்கா

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

ஹைலைட்ஸ்

  • பேரழிவை ஏற்படுத்திய 5 வைரஸ்கள் சீனாவிலிருந்து பரவியதாக அமெரிக்கா புகார்
  • மீண்டும் சீனாவிலிருந்து வைரஸ் பரவுவதை ஏற்க முடியாது என கண்டனம்
  • சீனாவுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யத் தயார் : அமெரிக்கா
Washington:

கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய 5 நோய்கள், சீனாவிடம் இருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா போன்ற இன்னொரு நோய் சீனாவில் இருந்து மீண்டும் பரவுவதை ஏற்கவே முடியாது என்றும் அமெரிக்கா கண்டித்துள்ளது. 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 40 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.50 லட்சம்பேர் உயிரிழந்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்றும், சீனா நினைத்திருந்தால் அதனை தங்களது நாட்டிலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

சீனாவில் இருந்து பேரழிவை ஏற்படுத்தும் வைரஸ்கள் உற்பத்தி ஆகுவதை மீண்டும் ஏற்க முடியாது என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்ததா அல்லது மார்க்கெட்டில் இருந்து வந்ததா என்பது முக்கியம் அல்ல. சீனாவில் இருந்து வந்ததே பெரிய பிரச்னை ஆகும். 

கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய சார்ஸ், ஏவியன் ஃப்ளு, பன்றிக் காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட 5 வைரஸ்கள் சீனாவிடம் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது. 

நோய்களை பரவ விட்டு உலக நாடுகளை சீனா சேதப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் சுகாதாரத்துறை வல்லுனர்களை அனுப்புகிறோம் என்று சீனாவிடம் தெரிவித்தோர். அவர்கள் நிராகரித்து விட்டார்கள். 

எனவே சுகாதாரத்தை சீனா முறையாக கையாள வேண்டும். இன்னும் கொரோனா போன்ற மற்றொரு சம்பவம் சீனாவில் இருந்து பரவுவதை ஏற்கவே முடியாது.

உலக பொருளாதாரம் முடங்கி விட்டது. இது முதன்முறையல்ல. கடந்த 20 ஆண்டுகளில் 5-வது முறையாக உலக பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு இந்த விஷயத்தில் மற்ற நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. அதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் தொடங்கியுள்ளது. இன்னொரு சுகாதார பேரழிவு ஏற்படக்கூடாது 


இவ்வாறு அவர் தெரிவித்ததார். 


 

.