This Article is From Mar 19, 2020

நகரங்களைத் தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

இந்த தொற்று நோயினை கட்டுப்படுத்த இந்தியா தனது சர்வதேச எல்லைகளை மூடியுள்ளதோடு, விசாக்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும், மால்கள், சினிமாக்கள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற பொது இடங்களை மாநில அரசுகள் மூடிவிட்டன. பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

நகரங்களைத் தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார் (கோப்பு)

New Delhi:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக "நம்முடைய அனைத்து நகரங்களையும் 2-4 வாரங்களுக்கு உடனடியாக தனிமைப்படுத்த" உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையைக் குறிப்பிட்டு, "சுகாதார ரீதியாகச் சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு நபரையும் தனிமைப்படுத்தவும், பரிசோதிக்கவும் சிகிச்சையளிக்கவும்" அனைத்து நாடுகளும் வலியுறுத்தின, மேலும் சந்தேகத்திற்குரிய COVID-19 நோயாளிகளால் செய்யக்கூடிய ஒவ்வொரு தொடர்புகளையும் கண்டறியவும் அவை வழிகாட்டியுள்ளன.

"நேற்று WHO டைரக்டர் ஜெனரலின் அறிக்கைக்குப் பிறகு, நம்முடைய அனைத்து நகரங்களையும் 2-4 வாரங்களுக்கு உடனடியாக தனிமைப்படுத்த உத்தரவிடத் தயங்கக்கூடாது" என்று  சிதம்பரம் இன்று காலை ட்வீட் செய்துள்ளார்.

"இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயினில் என்ன நடக்கிறது என்பதை நாம் கண்டபின்னும், தனிமைப்படுத்துதலின் தர்க்கரீதியான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் ஏன் மறுக்கிறது?" என்று அவர் கேட்டார், "மத்திய அரசு ஆட்சி செய்கின்ற சில மாநிலங்கள் தங்கள் நகரங்களைத் தனிமைப்படுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவுக்கு வெளியே COVID-19 தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

உலக சுகாதார அமைப்பு, இத்தாலியில் 35,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் 2,900 இறப்புகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானில், 255 சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்குச் சோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், அந்நாட்டில் 17,000 க்கும் மேற்பட்டதாக நோயாளிகளின் எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. ஸ்பெயினில் கிட்டத்தட்ட 14,000 ஆக நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளது.

இத்தாலியர்களும் ஸ்பானியர்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிராந்திய அளவில் மில்லியன் கணக்கானவர்கள் பாதித்துள்ளனர்.

இந்தியாவில் 144 தடை உத்தரவின் கீழ் பெரிய கூட்டங்களைத் தடைசெய்வதன் மூலம் இந்தியாவில் இதேபோன்ற முழுமையான சுகாதார அவசியத்திற்கான அடைப்பு வேண்டி கோரிக்கை ஒன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொழிலதிபர்கள் குழுவினரால் அனுப்பப்பட்டது.

"ஐ.சி.எம்.ஆரின் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) சீரற்ற மாதிரி சோதனையில், இதுவரை சமூக பரிமாற்றம் (நிலை 3) இல்லை என்று தெரியவந்துள்ளதால், தற்காலிகமாக நகரங்கள் மற்றும் கிராமங்களை தனிமைப்படுத்த வேண்டும். 2 ஆம் கட்டத்தில் நோயைக் கொண்டிருக்கும் தருணம் இது" என்று  சிதம்பரம் கூறியுள்ளார்.

98uoks08

நிலை 2 என்பது வெளிநாட்டிற்குச் சென்ற உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்கள் போன்ற பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து உள்ளூர் பரிமாற்றத்தை உள்ளடக்கியது. நிலை 3, சமூக பரிமாற்றத்தை உள்ளடக்கியது, இது பாதிக்கப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கையில் அதிவேக தாக்கத்திற்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 170 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்று உடையவர்கள் உள்ளனர். இது வரை மூன்று இறப்புகள் இதனால் ஏற்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் இந்த தொற்று காரணமாக முறையே 42 மற்றும் 25 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொற்று நோயினை கட்டுப்படுத்த இந்தியா தனது சர்வதேச எல்லைகளை மூடியுள்ளதோடு, விசாக்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும், மால்கள், சினிமாக்கள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற பொது இடங்களை மாநில அரசுகள் மூடிவிட்டன. பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.

இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்ற நாட்டில் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  எவ்வாறாயினும், அரசாங்கத்தின் குறைந்த அளவிலான சோதனைகள் குறித்து வல்லுநர்கள் தங்கள் அச்சங்களை வெளிப்படுத்தப்பட்டுள்ளனர், இது வைரஸ் பரவலின் உண்மையான அளவை மறைக்கக்கூடும்.

புதன்கிழமை WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ் நாடுகள் தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான "தனிமைப்படுத்த வேண்டும், சோதிக்க வேண்டும், சிகிச்சை செய்ய வேண்டும் மற்றும் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும்,  "நாடுகளால் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. விளையாட்டு நிகழ்வுகள், கச்சேரிகள் மற்றும் பிற பெரிய கூட்டங்களை ரத்து செய்வதும் போன்ற உடல் ரீதியான இடைவெளி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலமாகவும் வைரஸின் பரவலை மெதுவாக்க உதவும்" என்றும்  கெப்ரேயஸ் கூறினார். மேலும்,  "இவை சுகாதார அமைப்பின் மீதான சுமையைக் குறைப்பதோடு, தொற்றுநோய்களை நிர்வகிக்கவும் உதவுகின்றன. தொற்றுநோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், சோதனை செய்ய வேண்டும், சிகிச்சையளிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

COVID-19 வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு சந்தையில் தோன்றியதாக நம்பப்படுகிறது. உலகளவில், உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 8,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், மேலும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.