This Article is From Apr 12, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் சரிபாதி மாவட்டங்கள்!

ஏப்ரல் 6 அன்று 284 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டன. தற்போது 364க்கும் அதிகமான மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் சரிபாதி மாவட்டங்கள்!

கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Number of coronavirus cases doubled in India in a week's time
  • More than 364 districts are currently affected by the pandemic
  • 40 districts are affected in UP and 27 in Maharashtra
New Delhi:

சர்வதேச அளவில் ஒரு லட்சம் உயிர்களைப் பலிவாங்கியுள்ள கொரோனா தொற்று, 17 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்திருக்கின்றது. இந்தியாவை பொருத்தமட்டில், மொத்தமாக உள்ள 718 மாவட்டங்களில் பாதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 10 நாட்களில் தொற்றானது 120 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியுள்ளதாக சுகாதார துறை என்.டிடிவியிடம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பரவல்  ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8356 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 29 அன்று நாடு முழுவதும் 160 மாவட்டங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 அன்று 284 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டன. தற்போது 364க்கும் அதிகமான மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்  40 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தமிழகத்தில் 33 மாவட்டங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகம் தேசிய அளவில் கொரொனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் முதலாக உள்ள மாகராஷ்டிரா மாநிலத்தில் 27 மாவட்டங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக உள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் 11 மாவட்டங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது.

கொரோன தொற்று பாதித்த இடங்களைச் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களை கொண்டு அடையாளப்படுத்த அரசு முயன்று வருகின்றது. இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கை (LOCKDOWN) செவ்வாய்க்கிழமையோடு முடிவடைகிறது.

இந்தியாவில் 400 நகரங்கள் பசுமை நகரங்களாக உள்ளன. அதாவது கொரோனா தொற்று ஏற்படாத நகரங்களாக இவை இருக்கின்றன. இவை பச்சை நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்படும்.

ஆரஞ்சு நிறம் என்பது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பின் அந்த நகரங்கள் ஆரஞ்சு நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். மேலும், இப்பகுதிகளில் தொற்று பரவல் இல்லையென உறுதி செய்யப்பட்ட பின்பு பொது போக்குவரத்தினை இப்பகுதியில் அனுமதிப்பது, விவசாய விளை பொருட்கள் அறுவடைக்கு அனுமதி அளிப்பது, போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15க்கும் அதிகமாக இருக்கும் இடங்கள் சிவப்பு நிறம் கொண்டு அடையாளப்படுத்தப்படும் இங்கு எவ்வித நடவடிக்கையும் அனுமதிக்கப்படமாட்டாது.

முன்னதாக முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடிய மோடி, மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படுவதற்கான வாய்பிருப்பததை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.