This Article is From May 08, 2020

புர்கா அணிந்து டெல்லி கோயில்களை சுத்தம் செய்யும் கொரோனா போராளி, அர்ச்சகர்கள் வரவேற்பு!

அவர் இந்து கோயில்களுக்கு செல்லும்போது, அங்கிருக்கும் அர்ச்சகர்கள் இன்முகத்தோடு வரவேற்கிறார்கள். 

புர்கா அணிந்து டெல்லி கோயில்களை சுத்தம் செய்யும் கொரோனா போராளி, அர்ச்சகர்கள் வரவேற்பு!

3 குழந்தைகளுக்குத் தாயான இம்ரானா, புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தாலும், தினமும் கோயில்களை சானிடைஸ் செய்ய தவறுவதில்லை.

New Delhi:

தலை முதல் கால் வரை புர்கா அணிந்திருக்கும் 32 வயதாகும் இம்ரானா சயிஃபி, வடக்கு டெல்லியில் உள்ள நவ துர்கா கோயிலுக்கு வருகை தரும் சாதாரண நபர் அல்ல. 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வடக்கு டெல்லியில் கும்பல் வன்முறைகள் நடந்த அதே இடத்தில், தற்போது இரு தரப்பினரிடையே நல்லிணக்கம் நிலவுகிறது. 

வடக்கு டெல்லியின் நேரு விகார் பகுதியில் உள்ள மசூதிகள், கோயில்கள், குருத்வாராக்களை சானிடைஸ் (சுத்திகரிப்பு) செய்யும் பணியை கையிலெடுத்துள்ளார் இம்ரானா சயிஃபி. 

3 குழந்தைகளுக்குத் தாயான இம்ரானா, புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தாலும், தினமும் கோயில்களை சானிடைஸ் செய்ய தவறுவதில்லை. கோயில்களை சுத்தம் செய்வதற்கான சானிடைசர் டேங்க்-ஐ உள்ளூர் குடியிருப்பு நலச் சங்கம் அவருக்கு வழங்கியுள்ளது. 
 

6igq5f28

தினமும் தன் குடியிருப்புப் பகுதியை சானிடைஸ் செய்து வருகிறார் இம்ரானா.

அவர் இந்து கோயில்களுக்கு செல்லும்போது, அங்கிருக்கும் அர்ச்சகர்கள் இன்முகத்தோடு வரவேற்கிறார்கள். 

மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வரை வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார் இம்ரானா. 

தற்போது தன் ‘கோரோனா போராளிகள்' குழுவில் 3 பெண்களை இணைத்து சானிடைஸ் செய்யும் பணியை செய்து வருகிறார் இம்ரானா. 

“இந்தியாவின் மதச்சார்பின்மை கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்க நினைக்கிறேன். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்று என்றும் ஒன்றாக நிற்போம் என்னும் செய்தியையும் நான் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்,” என்று சொல்லும் இம்ரானா, 

“இதுவரை எந்த கோயில் அர்ச்சகர்களும் எங்களை தடுத்து நிறுத்தியதில்லை. எந்த சங்கடத்தையும் சந்திக்கவில்லை,” என்று பெருமையோடு சொல்கிறார். 

நேரு விகாரில் உள்ள நவ துர்கா கோயிலில் உள்ள அர்ச்சகர், பண்டிதர் யோகேஷ் கிருஷ்ணா, “மத நல்லிணக்கத்துக்கு இதைப் போன்ற செயல்கள் முக்கியமாகும். இதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். வெறுப்பை விட்டொழித்து, அன்பைப் பரப்ப வேண்டும்,” என்று வலியுறுத்துகிறார். 

6igq5f28

சானிடைஸ் செய்யும் பணியில் தனக்கு எந்த சங்கடமும் நேர்ந்ததில்லை என்கிறார் இம்ரானா.

இம்ரானாவின் கணவரான நியாமத் அலி ஒரு ப்லம்பர். இருவரும் வேலை செய்துதான் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். 

தற்போது நாடு தழுவிய ஊரடங்கு நிலவுவதனால், இருவருக்கும் பணி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

“கொரோனா வைரஸ் என்பது மிகக் கொடிய நோய் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்துள்ளது. அதனால்தான் சேவை செய்ய எங்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. இந்த நோய் தொற்று பல சமூகங்களை ஒன்றிணைத்துள்ளது,” என்கிறார் நம்பிக்கையுடன். 
 

.