This Article is From Apr 28, 2020

கூட்டத்தில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த முடியாது: பினராயி விஜயனை சாடும் பாஜகவினர்!

இதுதொடர்பாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறும்போது, நோய்த்தொற்றுக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயலாற்றி வரும் நிலையில், கேரள முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது.

கூட்டத்தில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த முடியாது: பினராயி விஜயனை சாடும் பாஜகவினர்!

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த முடியாது:

ஹைலைட்ஸ்

  • ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாததை நியாயப்படுத்த முடியாது
  • 9 முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • மே.15ம் தேதி வரை பகுதி நேரமாக ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை
Thiruvananthapuram:

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நிலைமை குறித்து பிரதமர் மோடி நேற்றைய தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்காதது, கேரள பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறும்போது, நோய்த்தொற்றுக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயலாற்றி வரும் நிலையில், கேரள முதல்வர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது. 

கடந்த முறை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதால், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கேரள முதல்வர் கூறுகிறார். எனினும், கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான முதல்வர்கள் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஒட்டுமொத்த நாடே நோய்த்தொற்றுக்கு எதிராக ஒன்றாகச் செயல்பட்டு வரும் நிலையில், கேரள முதல்வர் கலந்துகொள்ளாததை, நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பினராயி விஜயன் தனது தினசரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, இந்த வீடியோ கான்பரன்சிங்கில் ஒரு சில முதலமைச்சர்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சரவை செயலாளர் நேற்றைய தினம் கூறினர். 

மேலும், வீடியோ கான்பரன்சிங்கில் நாங்கள் என்ன பேச போகிறோம் என்பதையும் முன்பே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதனை நாங்கள் ஞாயிற்றுக்கிழமையே அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், ஒரு சில முதல்வர்களுக்கு மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் தெரிவித்ததாகக் கூறினார்.

பிரதமருடனான வீடியோ கான்பரன்சிங்கில், 9 முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேரள தலைமை செயலாளர் டாம் ஜோஸ் கலந்துகொண்டார். 

மேலும், மே.15ம் தேதி வரை பகுதி நேரமாக ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைத்ததாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

.