This Article is From Dec 16, 2019

குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்

மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்

தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து, பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரீசீலனை செய்யவேண்டும்

Chennai, Tamil Nadu:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் டெல்லி மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்தன. அப்போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. அது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கவலை தெரிவித்ததோடு மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தெற்கு டெல்லியின் நியூ பிரண்ட்ச் காலனியில் காவல்துறையினருடன் மோதியதில் நான்கு பொது பேருந்துகள் மற்றும் இரண்டு காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன. 

வன்முறைக்குப் பின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் தலைமை வக்கீல் வசீம் அகமதுகான் கூறுகையில், “டெல்லி காவல்துறை எந்தவொரு அனுமதியுமின்றி வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து, ஊழியர்களை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியது மாணவர்களை அடித்து உதைத்தது. உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கலைக்க தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர்.

“தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுவதையடுத்து, பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரீசீலனை செய்யவேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டில் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் மீது மிருகத்தனமான  தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். 

சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

.