This Article is From Jul 08, 2020

கால்வான் பகுதியிலிருந்து 2 கி.மீ பின்வாங்கிய சீன ராணுவம்! உறுதிப்படுத்தும் புதிய ஆதாரம்!!

ஜூலை நடுப்பகுதியில் சீன ராணுவம் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து முற்றிலுமாக பின்வாங்கும் என எச்சரிக்கையுடன் தாங்கள் நம்புவதாக மத்திய அரசு என்டிடிவிக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு உயர்மட்ட பேச்சுவார்த்தை இது குறித்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கால்வான் பகுதியிலிருந்து 2 கி.மீ பின்வாங்கிய சீன ராணுவம்! உறுதிப்படுத்தும் புதிய ஆதாரம்!!

மாக்சரின் செயற்கைக்கோள் படங்கள் கால்வானில் சீன துருப்புக்களின் நிலை மாற்றத்தைக் காட்டுகிறது

ஹைலைட்ஸ்

  • சீன ராணுவம் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து 2 கி.மீ பின்வாங்கியுள்ளது
  • மாக்சாரிலிருந்து என்டிடிவி மூலம் பெறப்பட்ட படங்கள் இதனை உறுதி செய்துள்ளது
  • மற்றொரு உயர்மட்ட பேச்சுவார்த்தை இது குறித்து நடைபெறும்
New Delhi:

சமீபத்தில் கிழக்கு லடாக் பகுதியின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உட்பட 20 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு ராணுவமும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து தங்கள் படைகளை பின்வாங்க சம்மதித்தது.

un2ugft

ஜூன் 28 அன்று மாக்சரிடமிருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் படம் இப்பகுதியில் சீன கட்டமைப்புகளைக் காட்டுகிறது

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையின் பின்னர் தற்போது சீன ராணுவம் சர்ச்சைக்குரிய கால்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கி.மீ பின்வாங்கியுள்ளதை புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

5ig2nca8

ஜூலை 6 முதல் செயற்கைக்கோள் படம் அந்த பகுதியில் இருந்து கட்டமைப்புகள் அகற்றப்பட்டதைக் காட்டுகிறது

மாக்சாரிலிருந்து என்டிடிவி மூலம் பெறப்பட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள் இதனை உறுதி செய்துள்ளது.

ihl7jbf8

இப்பகுதியில் சீன கட்டமைப்புகளைக் காட்டும் செயற்கைக்கோள் படத்தின் நீண்ட ஷாட்

முன்னதாக ஜூன் 28 பெறப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், சீன ராணுவ துறுப்புக்கள் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே கூடாரங்களை அமைத்து தங்கியிருந்ததை காட்டியிருந்தன. மேலும், 423 மீட்டர் தொலைவு எல்லைக்குள் ஊடுருவியதற்கான ஆதாரங்களை பழைய செயற்கைக்கோள் படங்கள் தெளிவுப்படுத்தியருந்தது.

ro1f0i9o

சீன கட்டமைப்புகள் இப்பகுதியில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதைக் காட்டும் செயற்கைக்கோள் படம்.

ஜூலை நடுப்பகுதியில் சீன ராணுவம் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து முற்றிலுமாக பின்வாங்கும் என எச்சரிக்கையுடன் தாங்கள் நம்புவதாக மத்திய அரசு என்டிடிவிக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு உயர்மட்ட பேச்சுவார்த்தை இது குறித்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

.