This Article is From Dec 28, 2018

சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டுகள் சிறை!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வதிக்கப்பட்டுள்ளது

சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டுகள் சிறை!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராஜ்குமார், கடந்த 2012ம் ஆண்டு அவரது வீட்டில் வேலை செய்த 15வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக இவர் மீதும் இவரது நண்பர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ராஜ்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்ட போது, நீதிபதிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைதண்டனையுடன் ரூ.42,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பு எம்.பி.எம்., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

.