முப்படை தளபதிகள் மற்றும் முப்படையின் தலைமை தளபதி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்!

முதல் முறையாக இவ்வாறாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் “இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது“ என ராவத் கூறியிருந்தார்.

முப்படை தளபதிகள் மற்றும் முப்படையின் தலைமை தளபதி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர்!

ஜெனரல் பிபின் ராவத் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக உள்ளார்

New Delhi:

 இன்று மாலை 6 மணியளவில் இராணுவத்தின் முப்படைகளின் தலைமை படைத்தளபதி பிபின் ராவத் மற்றும் மூன்று படைத்தளபதிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பானது கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்கத்திற்கு(LOCKDOWN) மத்தியில் நடைபெற உள்ளது.

முதல் முறையாக இவ்வாறாகச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் “இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது“ என ராவத் கூறியிருந்தார்.

தேசிய அளவில் கொரோளா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35,000ஐ கடந்துள்ளது. 1,100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.