சாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை!

ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் பூனம் குமார், அனுராசிங், பவன் குமார், சூஷந்த் குமார், சிலேந்தர் குமார், அஜய் குமார், சச்சின் ஆகியோர் கொண்ட குழு மதுரை வந்துள்ளது. 

சாத்தான் குளம் இரட்டை படுகொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் மதுரை வருகை!

முதலில் விசாரணை நடத்திய மாநில சிபிசிஐடி போலீசார், வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். 

Madurai:

சாத்தான் குளம் இரட்டைப் படுகொலை வழக்கை விசாரிப்பதற்கு சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்துள்ளனர். அவர்கள் விசாரணையை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் பூனம் குமார், அனுராசிங், பவன் குமார், சூஷந்த் குமார், சிலேந்தர் குமார், அஜய் குமார், சச்சின் ஆகியோர் கொண்ட குழு மதுரை வந்துள்ளது. 

முன்னதாக வழக்கை கடந்த செவ்வாயன்று சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ம்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் வைத்து அவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. 

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம்தேதி ஜெயராஜும், 23-ம் தேதி பென்னிக்சும் படுகாயங்களுடன் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடு முழுவதும் இந்த இரட்டை படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில்,  இருவர் உயிரிழந்தது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

முதலில் விசாரணை நடத்திய மாநில சிபிசிஐடி போலீசார், வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் அடுத்த கட்டமாக வழக்கை சிபிஐ எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது.  இதில்  மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.