This Article is From Oct 05, 2018

குட்கா ஊழல் விவகாரம்: ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை!

முன்னாள் கூடுதல் கமிஷனர், எஸ்.ஸ்ரீதர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது

குட்கா ஊழல் விவகாரம்: ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை!

குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்து பல்வேறு சோதனைகள் நடத்தி வருகிறது. (கோப்புப் படம்)

New Delhi:

சென்னையில் இருக்கும் ஜிஎஸ்டி கூடுதல் கமிஷனர், செந்தில் வளவன், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் கூடுதல் கமிஷனர், எஸ்.ஸ்ரீதர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

குட்கா விவகாரம், முதன் முதலில் ஜூலை 2016-ம் ஆண்டு தான் தலை எடுத்தது. தமிழகத்தில், புகையிலை பொருட்கள் தயாரிக்கும் தொழிலதிபரான மாதவ் ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 250 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி எய்ப்பு செய்தது, அந்த சோதனையில் தெரிய வந்தது. சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

மே மாதம், பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள், மத்திய கலால் வரித் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்தது. 


 

.