This Article is From Apr 02, 2019

ஜான்சன்& ஜான்சன் பேபி ஷாம்புவில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல்: பகீர் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை கண்டறிந்தனர்.

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளது.

Jaipur:

ராஜஸ்தானில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவின் இரண்டு பேட்சில் நடத்தப்பட்ட மாதிரிகள் சோதனையில் புற்றுநோயை உருவாக்கும் பார்மால்டிஹைடெட்டின் இருப்பது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதை கண்டறிந்தனர்.

பிப்ரவரிக்குப் பின் அரசாங்கம் அதில் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற எதுவும் இல்லை என்று சொன்ன பின் ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் 24 ஷாம்பு பாட்டில்கள் இரண்டு பேட்ச்களில் இருந்து தோராயமாக எடுத்து சோதனை செய்து இந்த முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

“ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்டிஹைட்டை பிரஸர்வேடிவ்வாக பயன்படுத்துகிறது. ஆனால், ஜான்சன் & ஜான்சன்  நிறுவனம் ஃபார்மால்டிஹைடை பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் ஆய்வில் ஃபார்மால்டிஹைட் உள்ளது என்பது தெரியவந்துள்ளது என்று ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டாளர் ராஜா ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

“ஆய்வில் ஃபார்மால்டிஹைட் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை சொல்ல முடியாது. ஆனால் நிறுவனம் இதை சவாலாக கருதியுள்ளதால் கூடுதல் மாதிரிகளை மத்திய மருந்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்" என்று சர்மா தெரிவித்தார்.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘தீங்கு விளைவிக்கும் பொருள்களைக் கொண்டிருக்கும் -ஃபார்மால்டிஹைடுக்கான அபாயம் உள்ளது' என்ற வந்துள்ள முடிவை முற்றிலும் மறுப்பதாக” தெரிவித்துள்ளனர்.

மருந்து கட்டுபாட்டு ஆணையம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாக மருந்துகள் மற்றும் காஸ்மெடிக் மாதிரிகளை பரிசோதனை செய்தததில்  7 மாதிரிகள் கடந்த மாதம் தரச் சோதனையில் தோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

.