This Article is From Feb 01, 2019

பட்ஜெட் 2019: அமைப்பில்லா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு

Budget 2019: திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மாத ஊதியமாக ரூ. 3000 பெறுகிறவர்கள் 60 வயதை எட்டிய பிறகு பென்சனைப் பெறலாம்.

பட்ஜெட் 2019: அமைப்பில்லா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு

Budget 2019: திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மாத ஊதியமாக ரூ. 3000 பெறுகிறவர்கள் 60 வயதை எட்டிய பிறகு பென்சனைப் பெறலாம்.

New Delhi:

நிதி அமைச்சர் பியுஷ் கோயல் பிரதான் மந்திரி ஶ்ரீ யோகி மந்தன் என்ற திட்டத்தை அறிவித்தார். மாதம்  ரூ. 3000 முதல் 15,000 வரை  சம்பாதிக்கும் அமைப்பில்லா தொழிலாளர்கள் பயன் பெறும் விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

10 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் அமைப்பில்லா தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓய்வூதிய திட்டமாக மாறும் என்று கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி அமைப்பில்லா தொழிலாளர்களின் உழைப்பினால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் பியுஷ் கோயல்.

இதில் வீடுகளில் பணிபுரிபவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் இந்த மெகா பென்சன் திட்டத்தில் பயன் பெறுவார்கள். திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் மாத ஊதியமாக ரூ. 3000 பெறுகிறவர்கள் 60 வயதை எட்டிய பிறகு பென்சனைப் பெறலாம். இந்த திட்டத்தில் 29 வயதை எட்டியவர்கள் சேரும் பொழுது மாதம் ரூ.100ஐ கட்ட வேண்டும். 18 வயதுடையவர்கள் மாதம் ரூ55 கட்ட வேண்டும். 

இந்த திட்டத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜான  இத்திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடும் திட்டத்தில் இருக்கும் என்று கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.