This Article is From Jan 04, 2019

ரஃபேல்: பாஜக - காங்கிரஸ் இடையே வாக்குவாதம்! - நிர்மலா சீதாராமன் விளக்கம்

பிரதமர் மோடியை திருடன் என்று எப்படி கூறலாம் என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்

New Delhi:

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் பாஜக - காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதமர் மோடியை திருடன் என்று எப்படி கூறலாம் என மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 

மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 

விமானங்கள் ஒன்றும் அலமாரியில் இல்லை. காங்கிரசுக்கு விமானத்தை வாங்குவதில் விருப்பம் கிடையாது. பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே எங்களுடைய முன்னுரிமை.

1a7l3mso

 

நாட்டின் பாதுகாப்பிற்காகவே ரஃபேல் விமானம் வாங்கப்பட்டது. இந்தியாவில் ராணுவ விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சீனா 400 புதிய விமானங்களை வாங்கி உள்ளது. பாகிஸ்தான் தனது பாதுகாப்பு பலத்தை இரட்டிப்பாக்கி உள்ளது. அண்டை நாடுகளின் ராணுவ பலம் அதிகம் ஆகியுள்ளது. அவசரத்திற்காகவே விமானம் வாங்க முடிவெடுத்தோம்.நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் அரசு கருத்தில் கொள்ளவில்லை. 2001ல் வாஜ்பாய் அரசுதான் போர் விமானம் வாங்க கொள்கை அளவில் ஒப்பந்தம் அளித்தது. 2006ல் அனுமதி பெற்றும் காங்கிரஸ் விமானம் வாங்கவில்லை. 2014 வரை ரஃபேல் விமானம் வாங்காமல் காங்கிரஸ் காலம் தாழ்த்தியது.

 

rk2o5ik8

 

காங்கிரஸ் அரசு 126 விமானங்களை வாங்காதது ஏன்?. எதிர்க்கட்சிகள் எனது விளக்கத்தை கேட்க தயாராக இல்லை. இது அவர்கள் இரக்கமில்லாமல் இருப்பதை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

ரஃபேல் உண்மைகளை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நமது நாட்டிலேயே ரஃபேல் உற்பத்தி செய்யப்படும். 36 விமானங்களும் 2022க்குள் இந்தியாவிடம் வரும். யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் என்றார்.

.