This Article is From Jul 14, 2020

ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தயாராகும் பாஜக!

ராஜஸ்தானில் ஆட்சியை கலைப்பதற்கு பாஜக சச்சின் பைலட்டை சிக்க வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளது.

ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தயாராகும் பாஜக!

ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தயாராகும் பாஜக!

ஹைலைட்ஸ்

  • ஆளுநரை சந்திக்கும் அசோக் கெலாட்
  • நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தயாராகும் பாஜக
  • கெலாட் முகாமில் இருந்து 3 எம்எல்ஏக்கள் வெளியேறியதாக தெரிகிறது.
New Delhi:

சச்சின் பைலட்டிற்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியதை தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது மட்டுமே ஒரே தீர்வு என பாஜக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் உட்கட்சி மோதலை தீவிரமாக கண்காணித்து வந்த பாஜக சமயம் பார்த்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தயாராகிறது. இதனிடையே பெரும்பான்மை உள்ளதாக கூறிய, அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க உள்ளார். 

இதுதொடர்பாக ராஜஸ்தான் பாஜக தலைவர் ஓம் மாத்தூர் ஜெய்பூருக்கு சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு மேல்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. 

கெலாட்டு, தனக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்ததை தொடர்ந்து, மொத்தமுள்ள 200 எம்எல்ஏக்களில் காங்கிரஸ் தங்களுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது காங்கிரஸ் தரப்பு. 

எனினும், இன்று காலை கெலாட் முகாமில் இருந்து 3 எம்எல்ஏக்கள் வெளியேறியதாக தெரிகிறது. இதனால், அவரது பலம் 100ஆக குறைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சச்சின் பைலட் தனது முகாமில் 30 எம்எல்ஏக்கள் உள்ளதாக தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் வெளியிட்ட வீடியோவில் 16 எம்எல்ஏக்கள் இருப்பதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தரப்பு கூறும்போது, ராஜஸ்தானில் ஆட்சியை கலைப்பதற்கு பாஜக சச்சின் பைலட்டை சிக்க வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மட்டும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் விலகல் காரணமாக மத்திய பிரதேசம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

.