This Article is From Aug 13, 2020

ராஜஸ்தானில் நடைமுறை யுக்தியை மாற்றுகிறது பாஜக!

மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் தற்போது 102 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 72 எல்.எல்.ஏக்கள் பாஜக வசம் உள்ளனர். காங்கிரஸிலிருந்து பிரிந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19.

ராஜஸ்தானில் நடைமுறை யுக்தியை மாற்றுகிறது பாஜக!

வசுந்தரா ராஜே மற்றும் பிற ராஜஸ்தான் பாஜக தலைவர்கள் இன்று சந்திக்கின்றனர்.

New Delhi/ Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் சமீபத்தில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நாளை முதல் மாநில சட்டசபையின் சிறப்பு அமர்வு தொடங்க இருக்கின்றது. இந்நிலையில் மாநில பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் பிற ராஜஸ்தான் பாஜக தலைவர்கள் இன்று சந்திப்பினை மேற்கொள்கின்றனர்.

தற்போது மாநிலத்தின் ஆட்சியை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான அசோக் கெலாட்டுக்கு எதிராக மாநில துணை முதல் சச்சின் பைலட் போர் கொடி உயர்த்தியிருந்தார். ஏறத்தாழ 19 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சச்சின் தனே பிரித்து அதிருப்தி எம்.எல்.ஏ குழுவை உருவாக்கியிருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமீபத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி சச்சின் பைலட்டுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சச்சினுக்கும், முதல்வர் அசோகுக்கும் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது.

மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் தற்போது 102 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 72 எல்.எல்.ஏக்கள் பாஜக வசம் உள்ளனர். காங்கிரஸிலிருந்து பிரிந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19.

இந்நிலையில் தற்போது நடைபெற இருக்கும் கூட்டத்தில் வசுந்தரா ராஜே பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை. வசுந்தரா ராஜேவின் பணியாட்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                     

.