This Article is From Aug 14, 2019

"எதுக்கு எல்லாரும் அவன டார்கெட் பண்றீங்க!" முகெனிற்கான குறல் கொடுக்கும் தர்சன்!

Bigg Boss 3 Tamil: முன்னதாக இந்த பிரச்னையில் இருந்த  அபிராமி வருத்தம், வனிதாவின் வார்த்தைகளால் கோபமாக மாறியது.

Bigg boss 3: முகெனிற்கு ஆதரவாக குறல் கொடுக்கும் சாண்டி

Bigg Boss Tamil 3: முன்னதாக, வனிதா (Vanitha)வீட்டினுள் நுழையும்போதே கவினும் (Kavin) சாண்டியும் (Sandy) 'இருக்கு...சம்பவம் இருக்கு" என்றார்கள். ஆனால் அந்த சம்பவம் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சென்ற வாரம் பேசி ஒய்வடைந்தது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த முகென்-அபிராமி (Mugen - Abhirami fight)சண்டைதான் பிக் பாஸ் (Bigg Boss)வீட்டின் குறையை கிளித்துள்ளது. 

முன்னதாக சிறப்பு விருந்தினராக உள்ளே வந்த வனிதா இரவும் காலையுமாக, அபிராமியிடம் முகெனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். 'நீ ஜீரோ ஆகிட்ட, அவன் ஹீரோ ஆகிட்டான்', 'நீ என்னடா என்ன லவ் பண்றது எனக்கு தேவையே இல்லைனு தூக்கிப்போட்டுட்டு போ', 'துர்கா யாருனு சொன்னானா?', 'உன்ன யாரு காப்பாத்துறது?' என்ற வனிதாவின் வார்த்தைகள், அபிராமியை என்ன செய்ததோ என்று தெரியவில்லை. முன்னதாக இந்த பிரச்னையில் இருந்த  அபிராமி வருத்தம், இந்த வார்த்தைகளால் கோபமாக மாறியது.

k8ahj88

முகெனும், அபிராமியும் பேசிக்கொண்டிருக்க, மதுமிதா இந்த விவகாரம் பற்றி பேச ஆரம்பித்தார். பின் அனைவரின் குறலும் அந்த பிரச்னையில் ஒலித்தது. முகெனுக்கு எதிராக மதுமிதா, வனிதா, செரன் என அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை தீவிரத்தை அடைந்தது. முகெனை அனைவரும் டார்கெட் செய்ய, அவருக்கு ஆதரவாக தர்சன், சாண்டி, கவின் என ஆதரவிற்கு வந்தனர். கடைசியில் இந்த பிரச்னை முத்தி சண்டையில் முடிந்தது. இந்த பிரச்னையை அவர்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசி இருந்தார்கள் என்றால் இந்த அளவு தீவிரத்தை அடைந்திருக்காதோ.

அந்த பிரச்னை எல்லாம் ஓய்ந்த பின்னர், தான் செய்தது தவறு என அபிராமி முகெனிடம் மன்னிப்பு கேட்டார். 

பின் அனைவரும் அந்த நாளிற்கான டாஸ்க்கிற்காக அனைவரும் தயாராகினர். அன்று முழுவதும், இந்த பிரச்னையால் அபிராமிக்கு அறிவுரைகள் குவிந்த வண்ணம் இருந்தன. பின் ஹால் ஏரியாவில் அமர்ந்து வனிதா முகென், சாண்டி, கவின் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது டாஸ்க் பஷர் அடித்தது. டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன், ஆரம்பித்ததற்கு பின் என இந்த மூவரும் காட்டிய மாடுலேஷன் செம்ம.

rjflgboo

இந்த டாஸ்க்கில் என்டெர்டைய்னரான முகெனை அழைத்து லவ் வேஸ்ட் என்ற மாதிரி ஒரு பாடலை பாட சொல்கிறார் வனிதா. 

அடுத்து மதுமிதாவை அழைத்து அடுத்த நாள் குக்கிங் கிளாஸ் நடத்தும்படி கேட்டார்.

பின் அனைத்து பிரச்னைகளும் காணாமல் போய், ஆங்காங்கே, கவின்-சாண்டியின் காமெடியுடன் வீடு சற்று மகிழ்ச்சி நிறைந்ததாக மாறியது.

அன்று இரவு 'லாஸ் அவர்கள் காதலால் லாஸ் ஆன பெண்கள் எழும் வகையில், ஒரு பாட்டு பாடுவார்' என சாண்டி அறிவிப்பு வழங்க லாஸ்லியாவும் முகெனும் 'வேனா மச்சி வேனா மச்சி இந்த பசங்க காதலு' என பாட்டு பாடினார்கள்.

kbbvgffg

இன்றைய நாளுக்கான டாஸ்க் முடிந்தது என்று பிக் பாஸ் அறிவித்தவுடன், அனைவரும் மகிழ்ச்சியுடன் லாஸ்லியா, கவின், தர்ஷன், சாண்டி என அனைவரும் சவுண்ட் கொடுத்தனர். ஹோட்டல் மீண்டும் மன்னரின் அரன்மனையாக மாறியது. 

பார்ப்போம் நாளை என்ன பிரச்னை காத்திருக்கிறது என்று!

.