This Article is From Jul 24, 2019

பிக் பாஸ் 30வது நாள்: நீங்க மட்டும் லூசுனு சொல்லலாமா மீரா?

பொழுது சாயிற நேரத்துல பிக் பாஸ் இந்த வாரத்துக்கான டாஸ்க்க ஊர் மக்கள கூட்டி பஞ்சாயத்துல வச்சு அறிவிச்சிருந்தாரு. வூட்டையே ரெண்டு ஊரா பிரிச்சிட்டாரு பிக் பாஸ், பாம்புப்பட்டி vs கீரிப்பட்டி.

பிக் பாஸ் 30வது நாள்: நீங்க மட்டும் லூசுனு சொல்லலாமா மீரா?

"முன்டாசு சூரியனே!" அப்பிடிங்கிற பாட்டப்போட்டு, அப்பிடியே ஒரு ஆட்டத்தையும் போட்டு, பிக் பாஸ் வீட்டுல 30வது நாள் விடிஞ்சிருச்சு.

காலைல ஒரு நல்ல விஷயமா, சாக்க்ஷி கவின் கிட்ட, ''இனிமேல் நம்ம எதையும் யோசிக்க வேணாம், இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் மறந்துருவோம். மொத நாள்ல, எப்படி ஃப்ரண்டா இருந்தமோ அப்படியே இருப்போம்"-ன சொல்லியிருந்தாக.

பொழுது சாயிற நேரத்துல பிக் பாஸ் இந்த வாரத்துக்கான டாஸ்க ஊர் மக்கள கூட்டி பஞ்சாயத்துல வச்சு அறிவிச்சிருந்தாரு. வூட்டையே ரெண்டு ஊரா பிரிச்சிட்டாரு பிக் பாஸ். பாம்புப்பட்டி vs கீரிப்பட்டி. பாம்பும் கீரியுமா அடுச்சுக்கணும்னு பிக் பாஸ் எதிர்பாக்குறார் போல.

75vqdvso

ஊர்னா அந்த ஊருக்கு மக்கள் இருக்கனும்ல. வீட்ல இருந்த 13 பேர்ல, 7 பேர அந்த ஊர்லையும், 6 பேர இந்த ஊர்லையும் குடி வச்சாச்சு.

பாம்புப்பட்டி ஊர் வாசிகள் சேரன், ரேஷ்மா, கவின், சாக்க்ஷி, அபிராமி, சாண்டி, முகேன். இவங்க ஏரியா குளத்தங்கரை, மற்றும் வெசல் வாஷிங். ஊர் தலைவராக சேரன்.

கீரிப்பட்டில ஊர் மக்கா யாரெல்லாம்னா, மதுமிதா, சரவணன், தர்ஷன், செரின், மீரா, லாஸ்லியா. இவங்க ஏரியா அடுப்பங்கரை மற்றும் கிளீனிங். அங்குட்டு தலைவர்னா, இங்குட்டு தலைவி தான, இந்த ஊரு தலைவி மதுமிதா.

2c2cni8o

பாம்புப்பட்டிக்காரங்களுக்கு சோறு வேணும்னா, ஊர் மணிய அடுச்சு கீரிப்பட்டிக்காரங்க கொடுக்குற டாஸ்க்க செஞ்சிட்டு சாப்பிட்டுக்கலாம். அதே மாதிரி கீரிப்பட்டி காரங்க பாத்ரூம் பக்கம் போகனும்னா ஆண்கள் சொம்ப எடுத்துக்கிட்டும், பெண்கள் மண் குடத்த எடுத்துக்கிட்டும், பாம்புப்பட்டிக்காரங்க சொல்ற டாஸ்க்க செஞ்சிட்டு பாத்ரூம பயன்படுத்திக்கலாம்.

எல்லாரும் வேட்டி, சட்ட, சேலையெல்லாம் கட்டி அப்படியே அந்தந்த ஊரு காரங்க மாதிரியே மாற, பிக் பாஸ் இந்த டாஸ்க்ல ஒவ்வொருவரின் கதாப்பாத்திரம் இதுதான் என சொல்லி அனுப்புறார்.

fs8b8fg

முதலில் கீரிப்பட்டி ஊர்காரங்க. மதுமிதா அடுத்தவங்க முகத்தைப் பார்த்தே அவங்க யார் எப்படிங்கிறத கண்டுபிடிக்க தெரிஞ்ச கொண்ட ஊர் தலைவி. செரின்-தர்ஷன் கனவன் மனைவி, செரினின் மாமியார் மீரா. அதாவது தர்ஷனின் அம்மா. தர்ஷன், அம்மாவின் பிள்ளை, மனைவிக்கு ஒரு நல்ல கனவன். செரின் ஒரு அன்பான மனைவி. மீரா மருமகளை மற்றும் மற்ற ஊர் பெண்களையும் குறை சொல்லிக்கொண்டிருக்கும் மாமியார். லாஸ்லியா அந்த ஊரின் வாலுப்பிள்ளை, வாயாடி. சரவணன் அந்த ஊரோட மைனர். எல்லா பிரச்னையில் மூக்க நுழைக்கிற ஜாலியான கேரக்டர், முக்கியமா 'இவரோட வழி தனி வழி' என நினைச்சுட்டு இருக்கும் ஒரு ஆள்.

77v9dkh8

அடுத்து பாம்புப்பட்டி ஊர்காரங்கல பத்தி சொல்லனும்னா, முதலில் ஊர் தலைவர் சேரன். எல்லாரும் ஊருக்கு கட்டுப்பட்டு இருக்கணும்னு நெனைக்கிற நாட்டாமை. சாப்பாட்டுப் பிரியர். இந்த நாட்டமைக்கு அந்த ஊர் தலைவி மேல ஒரு கண்ணு. அந்த ஊர் மாதிரி இந்த ஊர் இல்லைங்க, சங்கம் எல்லாம் வச்சிருக்காங்க, அந்த சங்கத் தலைவர் சாக்க்ஷியாம். கவின், சாண்டினு ரெண்டே ரெண்டு உறுப்பினாராம். 'இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இந்த வீட்டுலையும் ஒரு புருஷன் பொண்டாட்டி இருக்காங்க. அவிங்க அபிராமி-முகேன். முகேன் 'வீட்டுல எலி, வெளியில புலி'. கடைசியா வந்த ரேஷ்மா அந்த ஊரோட திருட்டுக் கிழவியாம்!

சரிப்பா, இந்த டாஸ்க்குக்கு முன்னாடியும், இப்பவும் இவங்க கதாபாத்திரத்துல என்ன வித்தியாசம்?

gjre26ig

டாஸ்க் பஸர் அடிச்சதும், எல்லாரும் அந்த அந்த ஊரு காரங்களாவே மாறிட்டாங்க. ரெண்டு ஊரும் அப்பிடியே பரபரப்பாவே இருந்துச்சு. எல்லாரும் கேரக்டருல அப்படியே செட் ஆகிட்டாலும், மீரா கொஞ்சம் ரொம்ப அதிகமாவே செட் ஆகிட்டாங்க போல. ஊட்டி விட்ற, கை அழுத்துடா, கால அழுத்துடானு சொல்ல, ஒரு கட்டத்துல பொசுக்குனு 'நீ செத்த நான் தான கொல்லி வக்கணும். வச்சிறேன்"-னு சொல்லிட்டாரு.

7vpq6tcg

எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு, ஊர் மணிய அடிச்சு பஞ்சாயத்த கூட்டிட்டாங்க. மணிய அடிச்சது, மீரா. பஞ்சாயத்து என்னனா செரின் கைய சாண்டி புடுச்சு இழுத்துட்டான். இந்த பிரச்னைக்கு என்ன தீர்ப்புனு கேட்க, "எனக்கு கல்யானம் பண்ணி வச்சிருங்க"-னு மீரா கேட்க, அந்த பஞ்சாயத்து ரொம்ப லென்த்-ஆ போக ஆரம்பிச்சிருச்சு.

8ssis7p

இப்போ ஊர் பஞ்சாயத்து, வீட்டு பஞ்சாயத்தா மாறிடுச்சு.

'நாட்டாமை ரொம்ப சீரியஸா எடுத்து பண்ணிட்டு இருக்காரு'னு மீரா சொல்ல, ''வேணும்னே சண்டைய கெளப்பாத!'' என பல குரல் கேக்க ஆரம்பிச்சிருச்சு.

சரி மீரா, போன வாரம் சாக்க்ஷி லூசுனு சொன்னதுக்கு எவ்வளுவு பெரிய பிரச்னை பண்ணீங்க. லூசு ஒரு மரியாதை இல்லாத வார்த்தைனு எல்லாம் சொன்னீங்களே, இப்போ மதுமிதாவ பார்த்து நீங்க லூசுனு சொன்னிங்களே. மீரா, நீங்க மட்டும் மத்தவங்களை லூசுனு சொல்லிக்கலாமா?

teuncmag

கொஞ்ச நேரம் கலவர பூமியா இருந்த அந்த வீடு, அப்புறம் சாதரணமாக மாறிடுச்சு. அன்றைய நாள் டாஸ்க் முடியுற வர ரெண்டு ஊரும் கொண்டாட்டமாவே இருந்துச்சு.

டாஸ்க் முடிச்ச பின்னாடி கூட வீட்டுக்குள்ள ஒரு கொண்டாட்டம் இருந்துச்சு. அது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம். பிக் பாஸின் 30வது நாளில் பிறந்தநாளை கொண்டாடியது ரேஷ்மா. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரேஷ்மா!

-சு முரளி

.