This Article is From Jun 12, 2020

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் டிரான்ஸ்ஃபர்... புதிய செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம்!

தற்போது ஜெ.ராதாகிருஷ்ணன் புதிய சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2012-2019 ஆண்டு காலகட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் டிரான்ஸ்ஃபர்... புதிய செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் 38,716 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டு வந்த பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். 

தற்போது ஜெ.ராதாகிருஷ்ணன் புதிய சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2012-2019 ஆண்டு காலகட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.

தமிழகத்தில் வரும் நவம்பர் வரை தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.