This Article is From Aug 30, 2019

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் 4 உணவுகள்!!

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிடலாம்.  மேலும் ஓட்ஸ், பூண்டு, யோகர்ட், பீட்ரூட், ஆலிவ் எண்ணெய், பெர்ரி, தர்பூசணி, கிவி, வாழைப்பழம் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் 4 உணவுகள்!!

ஹைலைட்ஸ்

  • தவறான உணவு பழக்கம் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
  • சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயை போலவே, இரத்த அழுத்த நோயும் நம்மில் பெரும்பாலான மக்களை பாதித்து வருகிறது.  இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும்.  இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.  உப்பு நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.  அப்படி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நான்கு உணவுகள் என்னவென்று பார்ப்போம்.   

1. சர்க்கரை: 

உப்பு மட்டுமில்லாம் சர்க்கரையும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.  அதிகபடியாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்க வல்லது.  இதனால் உடல் பருமன், பல் சொத்தை மற்ரும் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.  

 

mdrtr7c

 

2. மது:

தொடர்ச்சியாக மது அருந்துவதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  ஆனால் அளவாக அருந்துவதால் இந்த பிரச்னை இருக்காது.  அளவு குறைவாக இருந்தாலும் மது எப்போதுமே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது தான்.  இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்கவும்.  

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: 

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு சத்து அதிகமாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட பழங்களில் கூட ஊட்டச்சத்து அளவு குறைவாகவே இருக்கும்.  அதனால் ஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட உணவுகள் அது ஊறுகாயாக இருந்தாலும் தவிர்ப்பது நல்லது. 

4. கஃபைன்: 

நம்மில் பெரும்பாலானோர்க்கு காலையில் முதலில் தேவைப்படுவது கஃபைன் நிறைந்த உணவு.  இந்த கஃபைன் உணவுகளும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.  அடிக்கடி காபி குடிப்பதை தவிர்க்கவும். 

de15qo4o

 

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில வழிகள்:

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிடலாம்.  மேலும் ஓட்ஸ், பூண்டு, யோகர்ட், பீட்ரூட், ஆலிவ் எண்ணெய், பெர்ரி, தர்பூசணி, கிவி, வாழைப்பழம் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

உடல் பருமனாக இருந்தால் முதலில் எடை குறைக்க வேண்டும்.

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்து கொள்ளவும். 

புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தத்துடன் இருப்பதை தவிர்த்து யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம். 

உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். 

.