This Article is From Aug 24, 2019

காஷ்மீருக்குச் செல்லும் எதிரக்கட்சித் தலைவர்கள்- ‘வரவேண்டாம்’ என அரசு எச்சரிக்கை!

இதுவரை மத்திய அரசு, ஜம்மூ காஷ்மீரில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அனுமதிக்கவில்லை.

ராகுலைத் தவிர காங்கிரஸ் சார்பில் குலாம் நபி அசாத் மற்றும் ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோரும் காஷ்மீருக்குப் பயணம் செய்ய உள்ளனர்.

New Delhi:

ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு. இந்நிலையில் காஷ்மீரின் நிலையை அறிந்துகொள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கு செல்கின்றனர். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் வருகையையொட்டி ட்வீட் செய்துள்ள ஜம்மூ காஷ்மீரின் தொலைதொடர்பு மற்றும் பொது விவகாரத் துறை, “அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்கு வரவேண்டாம். அப்படி வருவது இங்கிருப்பவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். எல்லை தாண்டிய பயங்கராவாதத்தில் இருந்தும் தாக்குதல்களில் இருந்தும் மக்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த நேரத்தில் அரசியல் தலைவர்கள் வருவது சரியாக இருக்காது…” என்று பதிவிட்டுள்ளது.

காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக-வைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதகள் இன்று காஷ்மீருக்கு செல்வார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ld0m6heg

ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முப்டி, ஒமர் அப்துல்லா உட்பட 400 அரசியல் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.  

ராகுலைத் தவிர காங்கிரஸ் சார்பில் குலாம் நபி அசாத் மற்றும் ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோரும் காஷ்மீருக்குப் பயணம் செய்ய உள்ளனர். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு, அசாத், இதுவரை 2 முறை ஜம்மூவுக்கு சென்றார். அவர் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு டெல்லிக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

சிபிஎம் சார்பில் சீதாராம் யெச்சூரி, சிபிஐ சார்பில் டி.ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா, ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா மற்றும் திரிணாமூல் சார்பில் தினேஷ் திரிவேதி ஆகியோர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை மத்திய அரசு, ஜம்மூ காஷ்மீரில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அனுமதிக்கவில்லை.

ஜம்மூ காஷ்மீர் அரசு நிர்வாகமும், அரசியல் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “ஜம்மூ காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் அதைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளது.
 

ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முப்டி, ஒமர் அப்துல்லா உட்பட 400 அரசியல் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.  

.