This Article is From May 31, 2018

ஆர்எஸ்எஸ் சந்திப்பில் கலந்துகொள்ளும் பிரணாப் முக்கர்ஜி: பின்னணி விளக்கம்

பிஜு ஜனதா தல் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தன் தந்தையின் சுயசரிதை வெளியிட்டு விழாவிற்கு மூத்த தலைவர்களை தன் வீட்டிற்கு அழைத்து சந்தித்தார்

ஹைலைட்ஸ்

  • பிரதமர் வேட்பாளர் ஆக வாய்ப்பு
  • அடுத்த மாதம் ஆர் எஸ் எஸ் நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்
  • மூத்த தலைவர்களுடன் சந்திப்பு
New Delhi: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆர் எஸ் எஸ் நிகழ்வை தலைமை தாங்க உள்ளார். காங்கிரஸ் உடன் இருந்த முக்கர்ஜி தற்போது தன்னை எந்த காட்சியிலும் சாராமல் தனித்து, தன் ட்விட்டரில் விவரித்தது போல் தனி குடிமகனாக காட்டிக்கொள்ள முற்படுகிறார். 

என்டிடிவி அலசியத்தில், 82 வயதான முக்கர்ஜி பிஜேபி, காங்கிரஸ் அல்லாத தலைவர்களை திரட்டி மற்றொரு தலைமை கட்சியை 2019க்குள் உருவாக்க முயல்கிறார் என தெரிகிறது. அதில் ஒரு சிலர் பிரணாப் முக்கர்ஜி-ஐ அடுத்த பிரதமர் வேட்பாளராக வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். 

பிஜு ஜனதா தல் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தன் தந்தையின் சுயசரிதை வெளியிட்டு விழாவிற்கு மூத்த தலைவர்களை தன் வீட்டிற்கு அழைத்து சந்தித்தார். பிரணாப் முகர்ஜி, ஜனதா தளம் மதச்சார்பற்ற தலைவர் தேவே கவுடா, இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே அத்வானி ஆகியோர் சந்தித்தனர். இது மற்ற சந்திப்புகள் போல் இல்லாததால், கட்சி குறித்த சந்திப்பாக இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

இந்த சந்திப்பை குறித்து நவீன் பட்நாயக் ட்வீட் செய்திருந்தார்,

 

கேள்விப்பட்ட வரை கட்சி துவங்க போட்ட முதல் பிள்ளையார் சுழி இந்த சந்திப்பு என தெரிய வருகிறது. இதில் பெங்கால் முதல் அமைச்சர் மற்றும் திருணமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜியும் உள்ளார். காங்கிரஸ், பிஜேபி, திருணமுள் மற்றும் பிஜேடி உள்ள முக்கிய தலைவர்கள் இந்த முன்னேற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். 

"பிரதமர் நரேந்திர மோடிக்கு சமமான அரசியல் செல்வாக்கு பிரணாப் முக்கர்ஜிக்கு உள்ளது" என பிஜெடி எம்பி தெரிவித்தார். 

இது குறித்து பிரான்ப முக்கர்ஜி அலுவுலகத்தில் இருந்து எந்த குறிப்பும் வரவில்லை 
.