முகமது ஷமிக்கு கைது வாரன்ட்... 15 நாட்களுக்குள் சரணடைய உத்தரவு!

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஷமி, அடுத்த 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்று கொல்கத்தா நீதிமன்றம் கூறியுள்ளது.

முகமது ஷமிக்கு கைது வாரன்ட்... 15 நாட்களுக்குள் சரணடைய உத்தரவு!

இதே வழக்கில், ஷமியின் சகோதரர் ஹஷித் அகமது மீதும் கைது செய்ய வாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது.

Kolkata:

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, அவர் மனைவி அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்ய வாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஷமி, அடுத்த 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்று கொல்கத்தா நீதிமன்றம் கூறியுள்ளது. டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

இதே வழக்கில், ஷமியின் சகோதரர் ஹஷித் அகமது மீதும் கைது செய்ய வாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது.

சார்ஜ்ஷீட் வழங்கப்படும் வரை ஷமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என பிசிசிஐ கூறியுள்ளதாக, ஐஏஎன்எஸ் தகவல் தெரிவிக்கிறது. 

ஷமியின் மனைவியான ஹசின் ஜஹான் கடந்த வருடம், தனது கணவரின் துரோகம் குறித்து சமூக ஊடகங்களில் திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தினார். மேலும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினர். ஷமி பல பெண்களுடன் உரையாடலில் ஈடுப்பட்டதாகவும் அவர் சமூக வலைதளத்தில் ஸ்கிரீன்ஷாட் வெளியிட்டார். அவர் மீது ஊழல் குற்றச் சாட்டும் வைத்தார். ஆனால், ஷமி இதை அனைத்தையும் மறுத்தார்.

"ஒருவேளை ஷமி சரணடையவில்லை என்றார், அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது," என்று ஜஹானின் வழக்கறிஞர் கூறினார்.

ஹசின் ஜஹான், வன்முறை செய்ததாக ஷமி மீது வழக்கு தொடுத்து, குடும்பத்துக்கு மாதம் 7 லட்ச ரூபாய் அவர் கொடுக்க வேண்டும் என கோரினார்.

கடந்த மாதம் ஹசின் ஜஹான் உத்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். இரவு சஹாஸ்ப்பூர் அலி கிராமத்தில் இருக்கும் முகமது ஷமியின் வீட்டுக்கு சென்றார் ஹசின். அவரின் மாமியார் வீட்டார் அவரை வீட்டைவிட்டு வெளியேற சொல்லியும், அவர் குழந்தைகளுடன் ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். பின்னர், அங்கு விரைந்த போலீஸ் ஹசினை சமாதானப்படுத்த முடியாமல் போனதால் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழத்து சென்றனர்.

இதுகுறித்து கூறிய ஹசின், "நான் என் கணவர் வீட்டுக்கு வந்தேன், இங்கு வருவதற்கான அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. என் கணவர் வீட்டார் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். போலீஸாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். அவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், என்னை அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் அழத்து செல்கின்றனர்" என்றார்.

கடந்த மார்ச் மாதம், முகமது ஷமி மீது 498ஏ (வரதட்சனை கொடுமை) மற்றும் 354ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய வழக்குகளை கொல்கத்தா போலீஸ் பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின் நகலை அவர்கள் இன்னும் பெறவில்லை என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஏ.எஃப்.பியிடம் கூறினார்.