This Article is From Jun 26, 2018

சக அதிகாரியின் மனைவியை கொன்ற ராணுவ அதிகாரி… டெல்லியில் ஒர் திடுக் சம்பவம்!

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியான நிகில் ஹாண்டா கைது செய்யப்பட்டுள்ளளார்.

ஹைலைட்ஸ்

  • கொலை செய்ந நிகில் ஹாண்டா கைது செய்யப்பட்டுள்ளார்
  • நிகிலும் சைலஜாவும் 2015 முதல் தொடர்பில் இருந்துள்ளனர்
  • கொலை செய்த பின்னர் நிகில், மீரட் நோக்கி தப்பித்து சென்றுள்ளார்
New Delhi: டெல்லியில் சக அதிகாரியின் மனைவியை, இன்னொரு ராணுவ அதிகாரி கொலை செய்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியான நிகில் ஹாண்டா கைது செய்யப்பட்டுள்ளளார்.

சைலஜா திவேதி, மேஜர் அமித் திவேதியின் மனைவி. அமித்தின் நண்பர் நிகில் ஹாண்டா. நிகிலும் சைலஜாவும் கடந்த 2015 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்தள்ளனர். நிகிலுக்கு சைலஜாவை திருமணம் செய்து கொள்ள ஆசை இருந்துள்ளது. இதனால், சைலஜாவை நிகில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இது அமித்துக்கு தெரிந்து, நிகிலை எச்சரித்துள்ளார். ஆனால், தொடர்ந்து நிகில் சைலஜாவிடம் பேசி வந்துள்ளார். சைலஜா, திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லிக்கு வந்துள்ளார் நிகில். தன்னை சந்திக்க வருமாறு சைலஜாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் சந்தித்த போதும் நிகில், திருமணத்தைப் பற்றியே பேசியுள்ளார். சைலஜா மறுக்கவே, அவரை கத்தியால் குத்தி காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர், சைலஜா மீது வண்டியை ஏற்றி கொலை செய்துள்ளார்.
 
major nikhil handa


விசாரணையின் போது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை கேமராவில் சைலஜா, காரில் ஏறுவது பதிவாகியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அரை மணி நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து, நிகிலை தேடும் பணியை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். அவர் உத்தரபிரதேச மாநில மீரட் நோக்கி சென்றதை கண்டறிந்தது போலீஸ். பின்னர், அவர் இருக்கும் இடத்தை அறிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
shailza dwivedi
 

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, ‘கடந்த சில நாட்களுக்கு முன்னரே அமித் திவேதி, நிகில் ஹாண்டாவை எச்சரித்துள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து சைலஜா திவேதியுடன் தொடர்பிலேயே இருந்துள்ளார். சைலஜாவை கொன்ற பிறகு, காரில் ஏற்றி விபத்து போல் காட்ட முயன்றுள்ளார் நிகில். கடந்த சில நாட்களாகவே நிகில் ஹாண்டா, அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கூட சரியாக தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது’ என்றனர்.

.