வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து நொறுக்கிய ஐபிஎஸ் ஆபிசர் மீது வழக்கு

மே 17, அன்று நம்ரதா சிங் வீங்கிய முகத்துடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி காவல்துறையில் பணிபுரிவதாகவும் கடந்த சில வருடங்களாக வரதட்சிணை கேட்டு அடித்ததாகவும் தெரிவித்தார்.

வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து நொறுக்கிய ஐபிஎஸ் ஆபிசர் மீது வழக்கு

நிகம் தற்போது துணை ஆணையராக ஆறாவது நாகலாந்து ஆயுதப் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.(மாதிரி படம்)

Meerut:

32 வயது பெண்ணொருவர் வீங்கிய கண்களுடன் மீரட் காவல்துறையில் தன் கணவருக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக வரதட்சிணை கொடுமையினால் தான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தன்னை தன்கணவர் விலங்கினைப் போல் அடித்து நொறுக்கியதாக குற்றம் சாட்டினார். 

மே 17, அன்று நம்ரதா சிங் வீங்கிய முகத்துடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி காவல்துறையில் பணிபுரிவதாகவும் கடந்த சில வருடங்களாக வரதட்சிணை கேட்டு அடித்ததாகவும் தெரிவித்தார்.

மூத்த காவல்துறை அதிகாரி, “பெண் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உள்ளூர் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்யப்படுவதாக” தெரிவித்தார். நம்ருதாவின் கணவர் அமித் நிகம் ஆவார். இருவரும் மீரட்டில் வசித்து வருகின்றனர். நிகம் தற்போது துணை ஆணையராக ஆறாவது நாகலாந்து  ஆயுதப் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்த வழக்கை விசாரித்து சிறப்பு நீதிமன்றம் நாகாலாந்து அரசுக்கு வழக்கு குறித்த தகவல்களை அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News