This Article is From Jun 26, 2019

சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜா வேதிகா கட்டிடம் இடிக்கப்பட்டது

சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்ட கட்டிடங்களை கட்ட இடிக்க உத்தரவிட்டுள்ளார்.

அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • பிரஜா வேதிகா கட்டிடம் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகில் கட்டபட்டது
  • கட்சியினரை சந்திக்க இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வந்தார்.
  • முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.
Amaravati:

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதி ஆற்றங்கரை அருகில் கட்டிய புதிய கட்டிடடமான பிரஜா வேதிகா கட்டிடத்தை  இடிக்க ஒரே நாளில் உத்திர விட்டுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. 


ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் சந்திரபாபு நாயுடு. இதற்கிடையில் 2016-ம் ஆண்டு முன்னதாக தான் வீட்டைக் காலி செய்து விட்டு அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார். வீட்டின் அருகில் மற்றொரு கட்டிடத்தைக் கட்டியிருந்தார். அங்கு கட்சியினரை சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் பயன்படுத்தி வந்தார். அந்த பிரஜா வேதிகா கட்டிடம் தான் இடிக்கப்பட்டுள்ளது. 


நேற்று முதன் முதலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்ட கட்டிடங்களை கட்ட இடிக்க உத்தரவிட்டுள்ளார்.  இந்த கட்டிடம் 2017 ஆம் ஆண்டு 5 கோடி செலவில் கட்டபட்டது. 

.