This Article is From Oct 21, 2018

அமிர்தசரஸ் ரயில் விபத்து: தசரா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது கல்வீச்சு!

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் விபத்து நடந்த தண்டவாளப் பகுதி அருகே நேற்று முதல் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்

அமிர்தசரஸ் கோர ரயில் விபத்து: கோபமடைந்த போராட்டகாரர்கள் தசரா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது கற்களை எறிந்தனர்.

Amritsar:

அமிர்தசரஸ் தசரா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கோபமடைந்த பொதுமக்கள் தசரா நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வீடுகள் மீது இன்று காலை கற்களை வீசியுள்ளனர்.

தசரா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கவுன்சிலர் விஜய்மாதவன் மற்றும் அவரது மகன் சவுராப் மதன் மிதுன் இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து குற்றவாளி என சந்தேகிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களே இதற்கு முழு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

20prto9o

ரயில் விபத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் விபத்து நடந்த தண்டவாளப் பகுதி அருகே நேற்று முதல் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று போலீசார் அவர்களை தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். எனினும், சிறுது நேரத்தில் அவர்கள் போலீஸ் மீது கற்களை எறிந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அந்த பகுதி மக்கள், ஜோதா பதாக் பகுதியின் பாதையை மறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள் இன்னும் பலரை காணவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். காணமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் ஓட்டுநரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படததால் அவர் கைது செய்யப்படவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தை நேற்று நேரில் பார்வையிட்ட பஞ்சாப் முதல் அமரிந்தர் சிங், சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கோர சம்பத்திற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்று கொள்ளாது என தொடர்ந்து கூறி வருகிறது. ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். எனவே இது விபத்தாகாது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 

.