This Article is From Dec 04, 2019

SC/ST ஆணையத்தின் விசாரணையை எதிர்கொள்ளும் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம்

கடந்த பத்தாண்டுகளில் 2,320 மாணவர்கள் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதில் 47 பேர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேர் மட்டுமே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

SC/ST ஆணையத்தின்  விசாரணையை எதிர்கொள்ளும் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம்

பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரிடமிருந்து தகுதியான வேட்பாளர்களின் பற்றாக்குறை -ஐஐடி இயக்குநர்

Chennai:

நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி கல்லூரி தலித் சமூகங்களைச் சேர்ந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான பாகுபாட்டினை கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. 

வேலைகளில் இடஒதுக்கீடு, மற்றும் பதவி உயர்வு இல்லாமை, அத்துடன் மாணவர் மற்றும் ஆசிரியர் தற்கொலைகளுக்கு வழிவகுக்கும் வகையில் மனரீதியாக துன்புறுத்தல் எனப் பல குற்றச்சாட்டுகள் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கையில் உள்ள தடைகள் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 2,320 மாணவர்கள் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதில் 47 பேர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேர் மட்டுமே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், கிட்டத்தட்ட 4,000 பிஹெச்டி வழங்கப்பட்டது. அதிலும் 213 பேர் மட்டுமே பட்டியல் சாதியினர், 21 பேர் பட்டியல் பழங்குடியினர். 

சமீபத்தில் சென்னை ஐஐசி வளாகத்திற்கு வருகை தந்த எஸ்சி/எஸ்டி தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஸ்வராஜ் வித்வான் இது குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று உறுதிபடுத்தியுள்ளார். நிலைமை குறித்து அறிக்கை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கும் தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான டாக்டர் முரளிதரன் NDTVயிடம் பேசியபோது, “இது பலகாலமாக நடந்து வருகிறது. ஆசிரியர்களை பொருத்தவரை, ஐஐடி ஒருபோதும் விளம்பரம் செய்யாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே  பெறப்படும். தலித் சமூகங்களைச் சேர்ந்த பல தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் இல்லை என்றாலும், விண்ணப்பித்தவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.” 

“சென்னை உயர்நீதிமன்றம் சட்டப்படி அனைத்து விண்ணப்பங்களையும் நேர்காணல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இன்னும் இந்த வேலைகள் உயர் சாதியினருக்கே செல்கின்றன. இடஒதுக்கீடு இங்கு பின்பற்றப்படவில்லை.” என்று அவர் கூறினார்.

சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரிடமிருந்து தகுதியான வேட்பாளர்களின் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார். நிறுவனம் முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று கூறினார். 

நாங்கள் இது பற்றி எச்சரிக்கையாக இருக்கிறோம். இந்திய அரசு ஒரு தெளிவான கொள்கையை கொண்டுள்ளது. நாங்கள் இணக்கமாக இருக்க விரும்புகிறோம். ஆசிரியர்களுக்கான தகுதியான வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. பிஹெச்டி படிப்பிற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் 300 பேர் பதிவு செய்துள்ளனர் என்று ஜூலை மாதம் நேர்காணலில் NDTVயிடம் தெரிவித்தார். 

கடந்த 11 மாதங்களில் சென்னை ஐ.ஐ.டியில் ஐந்து தற்கொலை வழக்கு பதிவாகியுள்ளது. நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு பெண் ஆசிரிய உறுப்பினர் தற்கொலை செய்துள்ளனர்.

.