This Article is From Jul 07, 2020

மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பா? திமுகவுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி!

வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வழக்கத்துக்கு மாறாக, மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணம் கூடுதலாக வருவதற்கான காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பா? திமுகவுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி!

மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பா? திமுகவுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி!

ஹைலைட்ஸ்

  • மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பா? திமுகவுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி!
  • மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணம் கூடுதலாக வருவதற்கான காரணம் என்ன?
  • கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக அரசு மீது பழி கூறுவதா?

மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக திமுக தரப்பில் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானத என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யமுடியாமல் போனது, இதனால், மின்சார பயனாளர்கள் கடந்த மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தலாம் என்றும் பின்னர் மின் கணக்கீடு செய்யும் போது, மொத்தமாக இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு, முன்பு கட்டிய கட்டணத்தை கழித்து மீத தொகையை செலுத்த வேண்டும் என அரசு அறிவித்தது. 

இதனிடையே, தமிழகம் முழுவதும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்து வந்துள்ளதாக பயனாளர்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக திமுக தரப்பில் கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, மின்கட்டணம் குளறுபடி தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். 

அதில், வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வழக்கத்துக்கு மாறாக, மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணம் கூடுதலாக வருவதற்கான காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மின் கட்டணத்தில் இருக்கும் படிமுறையை முறைப்படி கணக்கிட்டு இருந்திருந்தால், இந்த மின் கட்டணம் மக்களுக்கு வெகுவாக குறைந்திருக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் தங்கமணி கூறியதாவது, 

கொரோனாவில் இருந்து மக்ககளைக் காப்பதற்கு தொடர்ந்து, இரவு, பகல் பார்க்காமல் மொத்த அரசும் உழைத்து வருகிறது. அப்படி இருக்க, தங்களது அரசியல் இருப்பை காட்டிக்கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்தின் பெயரில் அறிக்கை வெளியிடத் திட்டமிட்டு அதனை அக்கட்சியை சேர்ந்த செந்தில் பாலாஜி பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது. 

ஊரடங்கு சமயத்தில் மின்சார அளவீட்டைக் கணக்கெடுப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக முதல் மாத மின்சார உபயோக அளவீட்டையே அடுத்தடுத்த மாதத்திற்கும் கணக்கு செய்து கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனை கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக அரசு மீது பழி கூறுவதற்கு திமுக தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.