This Article is From Nov 01, 2019

மகிழ்ச்சியடைய வேண்டாம் அமெரிக்கா; நாங்கள் பரவி வருகிறோம்: ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை

Abu Bakr al-Baghdadi Dead: ஐஎஸ் தற்போது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் பரவிக் கொண்டு இருக்கிறோம்.

மகிழ்ச்சியடைய வேண்டாம் அமெரிக்கா; நாங்கள் பரவி வருகிறோம்: ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை

அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். (File Photo)

Beirut, Lebanon:

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியை கொன்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இராக்கைச் சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதியின் வயது 48. 

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதி சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியான இட்லிப்  என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததையடுத்து உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து  மரணம் அடைந்துள்ளார். அப்போது பாக்தாதியின் வாரிசுகளான அபு இப்ராஹிம் அல் அல்-ஹாஷிமி அல்-கொராஷியும் இணைந்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“ஷேக் அல்-பக்தாதியைக் கொன்றதில் அமெரிக்க மகிழ்ச்சியடைய வேண்டாம் அமெரிக்கா. ஐஎஸ் தற்போது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் பரவிக் கொண்டு இருக்கிறோம்” என்று ஐஎஸ் அமைப்பு ஆடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் யார் என்பதற்கான எந்த குறிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இருந்த ஐஎஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கொல்லப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.