This Article is From Jul 28, 2020

ஆண் சிங்கத்தை எதிர்த்து கர்ஜித்து சண்டையிட்டப் பெண் சிங்கம்! வீடியோ உள்ளே

குஜராத் வனப்பகுதியில் இரண்டு சிங்கங்கள் மோதும் வீடியோ வைரலாகியுள்ளது.

ஆண் சிங்கத்தை எதிர்த்து கர்ஜித்து சண்டையிட்டப் பெண் சிங்கம்! வீடியோ உள்ளே

சிங்கங்கள் மோதும் வைரல் வீடியோ

பொதுவாக சிங்கம் மற்ற விலங்கினங்களை வேட்டையாடும் வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், சிங்களுக்கிடையே ஏற்படும் சண்டையைப் பார்த்ததுண்டா? அதுவும் ஆண் சிங்கத்தை ஒரு பெண் சிங்கம் எப்படி எதிர்த்து நின்று கர்ஜிக்கும் என்பதைப் பார்த்ததுண்டா?

இப்படியொரு சம்பவம் குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் அரங்கேறியுள்ளது. அரசியல் பிரமுகரும், புகைப்படக் கலைஞருமான ஜூபின் அஷாரா என்பவர்தான் சிங்கங்களின் இந்த சண்டைக் காட்சியை அப்படியே படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ 22 நொடிகள் மட்டுமே உள்ளது. ஆனால், ஒவ்வொரு நொடியும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது. 

வனப்பகுதியின் பாதையில் சுற்றுலாப் பயணிகள் மூன்று வாகனங்களில் நிற்கின்றனர். அவர்கள் எதிரில் இரண்டு சிங்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடுகின்றன. அவற்றில் பெண் சிங்கம் கடுமையாக கர்ஜித்து, ஆண் சிங்கத்தை நெருங்க விடாமல் செய்கிறது. ஒரு கட்டத்தில் இரு சிங்கங்களும் நிதானமடைந்து  சென்று விடுகின்றன.

வீடியோ:

இந்த வீடியோ வைல்டு இந்தியா டுவிட்டர் பக்கத்தில் வெளியாக, கிட்டத்தட்ட 2.6 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 

ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கிர் காடுகளில் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். குஜராத் அரசின் தகவலின்படி, கிர் வனப்பகுதியில் சுமார் 674 ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகிறது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை சிங்கங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். கடைசியாக 2015 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 

Click for more trending news


.