இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு - வெளியுறவு அமைச்சர் தகவல்!

ஏற்கனவே 5 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு - வெளியுறவு அமைச்சர் தகவல்!

இலங்கையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

New Delhi:

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஏற்கனவே இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி ஹனுமந்த ராயப்பா, ரங்கப்பா, லட்சுமி, நாராயன் சந்திர சேகர், ரமேஷ், வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ் ஆகிய 8 இந்தியர்கள் இலங்கை தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்திருக்கின்றனர். 

கேரளாவை சேர்ந்த பி.எஸ். ரசினா என்பவர் தாக்குதலில் உயிரிழந்தார் என கேரள அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த தகவலை இலங்கை தூதரகம் உறுதி செய்யவில்லை. இதேபோன்று அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளும் இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பலியாகி உள்ளனர். 

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று காலை 8.45-க்கு மேற்கு கடற்கரை பகுதி நகரமான நிகோம்போவில் புனித செபாஸ்டியன், புனித அந்தோணி சர்ச்சுகளிலும், மட்டக்களப்பில் உள்ள இன்னொரு சர்ச்சிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. 

இதேபோன்று தி ஷாங்ரி லா, தி சின்னமான் கிராண்ட், தி கிங்ஸ்பரி  ஆகிய 3 ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு காரணம் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. 

More News